வாழைத்தண்டு பச்சடி, vazhaithandu pachadi

வாழைத்தண்டு வைத்து பொதுவாக பொரியல், கூட்டு அல்லது குழம்பு செய்வது தான் வழக்கம். நான் எப்பொழுதும் பொரியல் தான் செய்வேன். ஒரு முறை இந்த இனிப்பு பச்சடி செய்துபார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இலையில் வைப்பதற்கு ஏற்றது. என் வீட்டிலும் எல்லோர்க்கும் பிடிக்கும். வெல்லம் சேர்த்த எதுவாக இருந்தாலும் எல்லோர்க்கும் பிடிக்கும் ?

மாங்காய் பச்சடி

வாழைத்தண்டு பச்சடி

தேவையான பொருட்கள்

வாழைத்தண்டு, பொடியாக நறுக்கியது – 1 கப்

வெல்லம் – 1/4 கப்

துருவிய தேங்காய் – 1/4 கப்

புளி கரைசல் – 1 மேஜைக்கரண்டி

அரிசி மாவு – 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி

உப்பு – 1/4 தேக்கரண்டி

தாளிக்க

எண்ணெய் – 1 தேக்கரண்டி

கடுகு – 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

சிகப்பு மிளகாய் – 2

கருவேப்பிலை – 1 ஆர்க்கு

வாழைத்தண்டு பச்சடி செய்முறை

 1. வாழைத்தண்டில், வெளிப்புறம் உரிக்கக்கூடிய பட்டை இருக்கும். பார்த்தாலே தெரியும், வளயம் போல இருக்கும். அதை நீக்கிவிடவும்.
 2. மெல்லிய வட்டங்களாக நறுக்கவும். நார் இருப்பின் நீக்கிவிடவும். ஆள் காட்டி விரலில் ஒவ்வொரு வளையம் நறுக்கும் பொழுதும் சுற்றிக் கொண்டால் நாரை எளிதில் நீக்கிவிட முடியும். அறிந்த வலயங்களை, அடுக்கி மெல்லிய துண்டுகளாக்கவும், அதனைப் பொடியாக நறுக்கவும். மோர் கலந்த நீரில் மூழ்கி வைக்கவும்.
 3. ஒரு பாத்திரத்தில், நறுக்கிய வாழைத்தண்டுடன் மூழ்கும் அளவு தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
 4. வெந்தவுடன் வெல்லம், புளி நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
 5.  தேங்காய், அரிசி மாவு, சிறிது தண்ணீர் ஒன்றாக அரைக்கவும்.
 6. வெந்த வாழைத்தண்டுடன் சேர்த்து கலந்து கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
 7. வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு வெடித்தது, உளுத்தம் பருப்பு, சிகப்பு மிளகாய் கிள்ளியது, கருவேப்பிலை சேர்த்து தாளித்து, பச்சடியில் கலக்கவும்.

குறிப்பு

 • வெல்லம் உங்கள் ருசிக்கு தகுந்தாற்போல் சேர்த்துக்கொள்ளவும். 
 • தேங்காய் அரைக்காமல் அப்படியே துருவியும்  சேர்க்கலாம். பச்சடி மிகவும் நீர்த்தாற்போல் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். 
வாழைத்தண்டு பச்சடி, vazhaithandu pachadi
 
Prep time
Cook time
Total time
 
வாழைத்தண்டு, வெள்ளம், புளி, தேங்காய் சேர்த்த பச்சடி. ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன்.
Author:
Recipe type: side dish
Cuisine: Indian
Serves: 3
Ingredients
 • வாழைத்தண்டு, பொடியாக நறுக்கியது - 1 கப்
 • வெல்லம் - ¼ கப்
 • துருவிய தேங்காய் - ¼ கப்
 • புளி கரைசல் - 1 மேஜைக்கரண்டி
 • அரிசி மாவு - ½ தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் - ⅛ தேக்கரண்டி
 • உப்பு - ¼ தேக்கரண்டி
 • தாளிக்க
 • எண்ணெய் - 1 தேக்கரண்டி
 • கடுகு - ½ தேக்கரண்டி
 • உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
 • சிகப்பு மிளகாய் - 2
 • கருவேப்பிலை - 1 ஆர்க்கு
Instructions
 1. வாழைத்தண்டில், வெளிப்புறம் உரிக்கக்கூடிய பட்டை இருக்கும். பார்த்தாலே தெரியும், வளயம் போல இருக்கும். அதை நீக்கிவிடவும்.
 2. மெல்லிய வட்டங்களாக நறுக்கவும். நார் இருப்பின் நீக்கிவிடவும். ஆள் காட்டி விரலில் ஒவ்வொரு வளையம் நறுக்கும் பொழுதும் சுற்றி கொண்டால் நாரை எளிதில் நீக்கிவிட முடியும்.அறிந்த வலயங்களை, அடுக்கி மெல்லிய துண்டுகளாக்கவும், அதனை பொடியாக நறுக்கவும். மோர் கலந்த நீரில் மூழ்கி வைக்கவும்.
 3. ஒரு பாத்திரத்தில், நறுக்கிய வாழைத்தண்டுடன் மூழ்கும் அளவு தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
 4. வெந்தவுடன் வெல்லம், புளி நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
 5. தேங்காய், அரிசி மாவு, சிறிது தண்ணீர் ஒன்றாக அரைக்கவும்.
 6. வெந்த வாழைத்தண்டுடன் சேர்த்து கலந்து கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
 7. வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு வெடித்தது, உளுத்தம் பருப்பு, சிகப்பு மிளகாய் கிள்ளியது, கருவேப்பிலை சேர்த்து தாளித்து, பச்சடியில் கலக்கவும்.
Notes
வெல்லம் உங்கள் ருசிக்கு தகுந்தாற்போல் சேர்த்துக்கொள்ளவும்.
தேங்காய் அரைக்காமல் அப்படியே துருவியும் சேர்க்கலாம். பச்சடி மிகவும் நீர்த்தாற்போல் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

Raks Anand

leave a comment

Rate this recipe:  

Create AccountLog In Your Account