
வெள்ளைச் சோள மாவு வைத்து அல்வா செய்வது எப்படி? இதில் நிறைய முந்திரி, பாதாம், பிஸ்தா, பேரிச்சை, உலர் திராட்சை போன்ற ட்ரை பிரூட்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. வீடியோ மற்றும் படங்களுடன்.
இந்த அல்வா, என்னுடைய மாமியாரிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன். மிகவும் எளிதில், மைக்ரோ வேவ் அவனில், குறைவான நெய் சேர்த்து பத்தே நிமிடங்களில் செய்துவிடுவார்.
நானும் மைக்ரோ வேவ் அவனில் தான் செய்து கொண்டிருந்தேன். இம்முறை ஒரு மாற்றத்திற்காக அடுப்பில் செய்து பார்த்தேன். தீபாவளிக்கு இந்த அல்வாவைச் செய்து அசத்துங்கள்.
கார்ன் ப்ளோர் அல்வா தேவையான பொருட்கள்
வெள்ளை சோள மாவு – 1/2 கப்
சக்கரை (unrefined) – 1 & 1/2 கப்
தண்ணீர் – 2 & 1/2 கப்
மிக்ஸட் dry fruits, நட்ஸ் – 3/4 கப்
ஏலக்காய் – 1
நெய் – 1/4 கப்
செய்முறை
- சோள மாவை 1 & 1/2 கப் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் சக்கரை + 1 கப் தண்ணீர் சேர்த்து, பிசுக்கு பதம் வரும் வரை கொதிக்கவிடவும்.
அதில் கரைத்த மாவை ஊற்றி, கை விடாமல் கிளறவும். - மாவு வெந்து, சிறிது கட்டியாகுவது போல தெரியும், அனால் பின்பு ஒரே சீராக வெந்து, பளபளப்பாகும்.
- இந்த நிலையில், மிக்ஸட் dry fruits, நட்ஸ் (சிறு துண்டுகளாக நறுக்கியது), ஏலக்காய் சேர்த்து கிளறவும். நெய்யை ஒரு சமயத்தில் ஒரு ஒரு தேக்கரண்டி யாக 1/4 கப் நெய்யயும் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.
- அடியில் சிறிது வெள்ளை பூத்தாற்போல் வரும் பொழுது நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறவிடவும்.
- ஆறிய பின், துண்டுகளாக போட்டு, பரிமாறவும்.
குறிப்புகள்
இங்கே நான் , முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை, பேரிச்சை மற்றும் சிறிது டூட்டி ப்ரூட்டி சேர்த்துள்ளேன். அத்திப்பழம் கூட சேர்க்கலாம்.
நெய், உங்கள் விருப்பத்திற்கேற்ப கூடுதலாகவோ, குறைவாகவோ சேர்க்கலாம்.
இதே ஹல்வாவை தேங்காய் எண்ணெய் சேர்த்தும் செய்யலாம்.

- வெள்ளை சோள மாவு - 1/2 கப்
- சக்கரை unrefined - 1 & 1/2 கப்
- தண்ணீர் - 2 & 1/2 கப்
- மிக்ஸட் dry fruits நட்ஸ் - 3/4 கப்
- ஏலக்காய் - 1
- நெய் - 1/4 கப்
- சோள மாவை 1 & 1/2 கப் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு அடி கனமான பாத்திரத்தில் சக்கரை + 1 கப் தண்ணீர் சேர்த்து, பிசுக்கு பதம் வரும் வரை கொதிக்கவிடவும்.
- அதில் கரைத்த மாவை ஊற்றி, கை விடாமல் கிளறவும்.
- மாவு வெந்து, சிறிது கட்டியாகுவது போலத் தெரியும், ஆனால் பின்பு ஒரே சீராக வெந்து, பளபளப்பாகும்.
- இந்த நிலையில், மிக்ஸட் dry fruits, நட்ஸ் (சிறு துண்டுகளாக நறுக்கியது) சேர்த்துக் கிளறவும்.
- நெய்யை ஒரு சமயத்தில் ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கிளறவும். 1/4 கப் நெய்யையும் இதைப் போலவே சேர்த்து, கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.
- அடியில் சிறிது வெள்ளை பூத்தாற்போல் வரும் பொழுது நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறவிடவும்.
- ஆறிய பின், துண்டுகளாகப் போட்டு, பரிமாறவும்.
இங்கே நான் முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை, பேரிச்சை மற்றும் சிறிது டூட்டி ப்ரூட்டி சேர்த்துள்ளேன். அத்திப்பழம் கூட சேர்க்கலாம்.
நெய், உங்கள் விருப்பத்திற்கேற்ப கூடுதலாகவோ, குறைவாகவோ சேர்க்கலாம்.
இதே ஹல்வாவை தேங்காய் எண்ணெய் சேர்த்தும் செய்யலாம்.