
கடலை பருப்பு சுண்டல் செய்வது எப்படி? தானியங்கள் வைத்து சுண்டல் செய்வது மிகவும் வழக்கமான ஒன்று. தானியங்கள் இல்லாவிட்டாலோ, முன்பே ஊறவைக்க மறந்துவிட்டாலோ, கடலை பருப்பை கொண்டு சுண்டல் செய்து விடலாம். வீட்டில் எப்பொழுதும் இருக்கும் ஒன்று, இந்த நவராத்திரியில் இதனை செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – 1 கப்
பச்சை மிளகாய் – 4
துருவிய தேங்காய் – 1/2 கப்
தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய இஞ்சி – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 3/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – 2 சிட்டிகை
கருவேப்பிலை – ஒரு கொத்து
கடலை பருப்பு சுண்டல் செய்முறை
- கடலை பருப்பை ஓரு மணி முதல் 3 மணி நேரம் வரை நேரம் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து, 3 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, அடி கனமான பாத்திரத்தில் கொதிக்கவிடவும். எளிதில் பொங்கி வழியக்கூடும், அதனால் கொதி வரும்பொழுது கலக்கி விடவும். ஓரிரு சொட்டு நல்லெண்ணெய் சேர்த்தல் மிருதுவாக வேவதுடன், பொங்கியும் ஊற்றாது.
- பருப்பு நன்கு உள்வரை வேக விடவும். குழுயாமல் பார்த்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்து, பொடியாக நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து அரை நிமிடம் வதக்கவும். வேகவைத்த கடலை பருப்பை, தண்ணீரை வடித்து சேர்க்கவும்.
- ஒரு நிமிடம் வதக்கி, துருவிய தேங்காய் சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும்.
குறிப்பு
- கடலை பருப்பைஊறவைப்பதன் மூலம், ஈரத்தன்மயுடனும், மிருதுவாகவும் இருக்கும். எளிதில் வெந்தும் விடும்.


- 1 கப் கடலை பருப்பு
- 4 பச்சை மிளகாய்
- ½ கப் துருவிய தேங்காய் –
- 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் –
- 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி
- உப்பு – தேவையான அளவு
- 2 தேக்கரண்டி தாளிக்க : எண்ணெய்
- ½ தேக்கரண்டி கடுகு
- 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
- 2 சிட்டிகை பெருங்காயம்
- கருவேப்பிலை – ஒரு கொத்து
கடலை பருப்பை ஓரு மணி முதல் 3 மணி நேரம் வரை நேரம் ஊறவைக்கவும்.
தண்ணீரை வடித்து, 3 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, அடி கனமான பாத்திரத்தில் கொதிக்கவிடவும்.
எளிதில் பொங்கி வழியக்கூடும், அதனால் கொதி வரும்பொழுது கலக்கி விடவும்.
ஓரிரு சொட்டு நல்லெண்ணெய் சேர்த்தல் மிருதுவாக வேவதுடன், பொங்கியும் ஊற்றாது.
- பருப்பு நன்கு உள்வரை வேக விடவும். குழுயாமல் பார்த்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்து, பொடியாக நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.
வேகவைத்த கடலை பருப்பை, தண்ணீரை வடித்து சேர்க்கவும்.
- ஒரு நிமிடம் வதக்கி, துருவிய தேங்காய் சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும்.
கடலை பருப்பை ஊறவைப்பதன் மூலம், ஈரத்தன்மயுடனும், மிருதுவாகவும் இருக்கும். எளிதில் வெந்தும் விடும்.