வாழைக்காய் கொண்டு வறுவல், கறி, பொரியல், பொடிமாஸ் செய்வது எல்லோருக்கும் வழக்கமான ஒன்று தான். தோசைக்கல்லில் வாழைக்காய் ரோஸ்ட் செய்வது, மிகவும் எளிது. மேலும் எண்ணெய் மிகவும் கொஞ்சமாகத் தான் தேவைப்படும். இங்கு வட்டமாக வெட்டி செய்துள்ளேன். சில சமயம், நீள வாக்கிலும் செய்வேன். இட்லி மிளகாய்ப் பொடி போட்டுச்செய்வதால் மொறு மொறுப்பாக இருக்கும். இட்லி மிளகாய்ப் பொடி இல்லாவிட்டால், அதற்குப் பதில், அரிசி மாவு உபயோகிக்கலாம்.
வாழைக்காய் ரோஸ்ட் செய்ய தேவையான பொருட்கள்:
வாழைக்காய் – 1
மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
இட்லி மிளகாய்ப் பொடி – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
வாழைக்காய் ரோஸ்ட் செய்முறை:
- வாழைக்காயைத் தோல் சீவி, கழுவி, பஜ்ஜிக்கு செதுக்குவதை விட சற்று மொத்தமாக சீவி வைக்கவும்.
- இதில், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, 1 மேஜைக்கரண்டி தண்ணீர் தெளித்து, பிசறி 10 நிமிடங்கள்வைக்கவும்.
- பத்து நிமிடங்கள் கழித்து, இட்லி மிளகாய்ப் பொடி (அல்லது அரிசி மாவு) சேர்த்துப் பிசறவும்.
- தோசைக்கல்லை சூடு செய்து, ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, அதன் மேல் இந்த வாழைக்காயை ஒவ்வொன்றாகவைத்து, மிதமான தீயில் இரு புறமும் பொன்னிறமாகும் வரை ரோஸ்ட் செய்யவும்.
குறிப்புகள்
- வாழைக்காயை மிகவும் மொத்தமாகவோ, அல்லது மிகவும் மெல்லீசாகவோ செதுக்க வேண்டாம்.
- சாம்பார் தூள் சேர்த்தும் இதே போல செய்யலாம்.
சூடாக சாதத்துடன் பரிமாறவும்

வாழைக்காய் ரோஸ்ட்
Prep Time
15 mins
Cook Time
20 mins
Total Time
35 mins
வாழைக்காய் கொண்டு தோசைக்கல்லில் ரோஸ்ட் செய்வது, மிகவும் எளிது, மேலும் எண்ணெய் மிகவும் கொஞ்சமாகத் தான் தேவைப்படும்.
Course: Sides
Cuisine: Indian
Servings: 2
Ingredients
- வாழைக்காய் - 1
- மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி
- இட்லி மிளகாய்ப் பொடி - 2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
Instructions
- வாழைக்காயைத் தோல் சீவி, கழுவி, பஜ்ஜிக்கு செதுக்குவதை விட சற்று மொத்தமாக சீவி வைக்கவும்.
- இதில், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, 1 மேஜைக்கரண்டி தண்ணீர் தெளித்து, பிசறி 10 நிமிடங்கள்வைக்கவும்.
- பத்து நிமிடங்கள் கழித்து, இட்லி மிளகாய்ப் பொடி (அல்லது அரிசி மாவு) சேர்த்துப் பிசறவும்.
- தோசைக்கல்லை சூடு செய்து, ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, அதன் மேல் இந்த வாழைக்காயை ஒவ்வொன்றாகவைத்து, மிதமான தீயில் இரு புறமும் பொன்னிறமாகும் வரை ரோஸ்ட் செய்யவும்.
Recipe Notes
வாழைக்காயை மிகவும் மொத்தமாகவோ, அல்லது மிகவும் மெல்லீசாகவோ செதுக்க வேண்டாம்.
சாம்பார் தூள் சேர்த்தும் இதே போல செய்யலாம்.