இஞ்சி துவையல் செய்வது எப்படி என்று இந்த பதிவில் கற்றுக்கொள்வோம். இஞ்சி துவையல், பசியை தூண்டும் மனமும் சுவையும் கொண்டது. இதை நான் பல முறை என் மாமி செய்வது போல, வதக்காமல், பச்சையால் புளி, பச்சை மிளகாய், உப்பு மட்டும் வைத்து அரைத்துள்ளேன். ஆனால் மற்ற துவையல்கள் செய்வது போல, இஞ்சி துவையலையும் செய்து பார்த்தேன், நன்றாக இருந்தது.
தேவையான பொருட்கள்
இஞ்சி, நறுக்கியது – 1/2 கப்
உளுந்து – 1 & 1/2 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் – 5
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
புளி – 1 தேக்கரண்டி
வெல்லம் – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
இஞ்சி துவையல் செய்முறை
- இஞ்சியை தோல் சீவி, நறுக்கிக்கொள்ளவும். மற்ற பொருட்களை எடுத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சூடு செய்து, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் இரண்டையும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அதில் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து 1/2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.
- ஆறவைத்து, உப்பு, வெல்லம் சேர்த்து, பொடி செய்யவும்.
- பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும்.
குறிப்பு
- உப்பு, புளி, மிளகாய் மூன்றையும் சரியான அளவு சேர்க்கவும்.

inji thogayal, இஞ்சி துவையல்
Prep Time
10 mins
Cook Time
10 mins
Total Time
20 mins
இஞ்சி துவையல் செய்வது எப்படி என்று இந்த பதிவில் கற்றுக்கொள்வோம். இஞ்சி துவையல், பசியை தூண்டும் மனமும் சுவையும் கொண்டது.
Course: Sides
Cuisine: Indian
Servings: 4
Ingredients
- இஞ்சி நறுக்கியது - 1/2 கப்
- உளுந்து - 1 & 1/2 மேஜைக்கரண்டி
- பச்சை மிளகாய் - 5
- பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
- புளி - 1 தேக்கரண்டி
- வெல்லம் - 1/2 தேக்கரண்டி
- எண்ணெய் - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
Instructions
- இஞ்சியை தோல் சீவி, நறுக்கிக்கொள்ளவும். மற்ற பொருட்களை எடுத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சூடு செய்து, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் இரண்டையும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அதில் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து 1/2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.
- ஆறவைத்து, உப்பு, வெல்லம் சேர்த்து, பொடி செய்யவும்.
- பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும்.
Recipe Notes
உப்பு, புளி, மிளகாய் மூன்றையும் சரியான அளவு சேர்க்கவும்.