காலிஃபிளவர் மிளகு மசாலா கறி செய்முறை
எங்கள் வீட்டில் பொதுவாக மசாலா சாமான்கள் உபயோகிப்பது வழக்கமில்லை. இன்னும் சொல்லவேண்டும் என்றால் எங்கள் வீட்டில் காலிஃபிளவர் சமைத்ததே கிடையாது. திருமணத்திற்கு பிறகு தான் நான் காலிஃபிளவர் கறி சாப்பிட்டேன். அதற்கு முன் ஒரு ஹோட்டலில் காலிஃபிளவர் தோசை சுவைத்து, மிகவும் பிடித்துவிட்டது. மசாலா பொருட்கள் சேர்த்த காளிபிலோவேர் கறி செய்துபார்க்கவேண்டும் என்று இதனை செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது.
தேவையான பொருட்கள்
காலிஃபிளவர் – 1 நடுத்தர அளவு
வெங்காயம் – 1
தக்காளி – 2
மஞ்சள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
அரைத்துக் கொள்ளவும்
சிவப்பு மிளகாய் – 3
கருப்பு மிளகு – 3/4 தேக்கரண்டி
வற கொத்தமல்லி (தனியா) – 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 2 பல்
தாளிக்க
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை – 1/2 அங்குல துண்டு
கிராம்பு – 2
பெருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை – 1 ஆர்க்கு
காலிஃபிளவர் மிளகு மசாலா கறி செய்முறை :
- காலிஃபிளவரை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி (2 கப்). உப்பு மற்றும் 1/8 தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து, கொத்தி நீரில் மூழ்க்கி வைக்கவும்.
- முதலில் தண்ணீரில்லாமல் மசாலா பொருட்களை மிக்சியில் அரைத்து, பிறகு மீண்டும் அதனுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து, கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு கனமான பான் / கடாயை சூடாக்கி, எண்ணெய் சேர்த்து, தாளிக்கவேண்டிய பொருட்களை வரிசைப்படி சேர்க்கவும். மெல்லிதாக வெட்டிய வெங்காயம் சேர்க்கவும்.
- வெங்காயம் வதங்கியதும், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்க்கவும். தேவையான உப்பு, மீதமுள்ள மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். நன்கு ஒன்று சேர்ந்தாற்போல வரவேண்டும்.
- காலிஃபிளவர் தண்ணீரில் இருந்து வடிகட்டி அதில் சேர்க்கவும். அரைத்த மசாலாவையும் சேர்க்கவும்.
- 3 நிமிடங்கள் அல்லது தண்ணீர் சுண்டும் வரை வேக விடவும். காலிஃபிளவர் வேக நேரமாகுமானால், மூடி வேக வைக்கலாம்.
- எண்ணெய் பிரிய ஆரம்பித்து, கறி பளபளப்பாகும் வரை வதக்கவும். மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து, காலிஃபிளவர் வதங்கி லேசாக சுருங்கும். அப்பொழுது அடுப்பை அனைத்து விடவும்.
குறிப்புகள்
- மசாலா அரைக்க மிக்சி இல்லாவிடில், தனியா தூள், மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து, பூண்டை நசுக்கி உபயோகிக்கலாம்.

- காலிஃபிளவர் - 1 நடுத்தர அளவு
- வெங்காயம் - 1
- தக்காளி - 2
- மஞ்சள் - 1/4 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
- அரைத்துக் கொள்ளவும்
- சிவப்பு மிளகாய் - 3
- கருப்பு மிளகு - 3/4 தேக்கரண்டி
- வற கொத்தமல்லி தனியா - 1 தேக்கரண்டி
- பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
- பூண்டு - 2 பல்
- தாளிக்க
- எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- இலவங்கப்பட்டை - 1/2 அங்குல துண்டு
- கிராம்பு - 2
- பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
- கருவேப்பிலை - 1 ஆர்க்கு
- காலிஃபிளவரை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி (2 கப்). உப்பு மற்றும் 1/8 தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து, கொத்தி நீரில் மூழ்க்கி வைக்கவும்.
- முதலில் தண்ணீரில்லாமல் மசாலா பொருட்களை மிக்சியில் அரைத்து, பிறகு மீண்டும் அதனுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து, கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு கனமான பான் / கடாயை சூடாக்கி, எண்ணெய் சேர்த்து, தாலிக்கவேண்டிய பொருட்களை வரிசைப்படி சேர்க்கவும். மெல்லிதாக வெட்டிய வெங்காயம் சேர்க்கவும்.
- வெங்காயம் வதங்கியதும், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்க்கவும். தேவையான உப்பு, மீதமுள்ள மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். நன்கு ஒன்று சேர்ந்தாற்போல வரவேண்டும்.
- காலிஃபிளவர் தண்ணீரில் இருந்து வடிகட்டி அதில் சேர்க்கவும். அரைத்த மசாலாவையும் சேர்க்கவும்.
- நிமிடங்கள் அல்லது தண்ணீர் சுண்டும் வரை வேக விடவும். காலிஃபிளவர் வேக நேரமாகுமானால், மூடி வேக வைக்கலாம்.
- எண்ணெய் பிரிய ஆரம்பித்து, கறி பளபளப்பாகும் வரை வதக்கவும். மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து, காலிஃபிளவர் வதங்கி லேசாக சுருங்கும். அப்பொழுது அடுப்பை அனைத்து விடவும்.
மசாலா அரைக்க மிக்சி இல்லாவிடில், தனியா தூள், மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து, பூண்டை நசுக்கி உபயோகிக்கலாம்.