உப்மா அடை செய்முறை, upma adai in tamil

உப்மா அடை செய்முறைஉப்மா அடை, அம்மா செய்யும் பலகாரத்தில் எனக்கு மிகவும் பிடித்தது. அரிசி, துவரம் பருப்பு, மிளகு ஜீரகம் கொண்டு செய்யும் இந்த பலகாரம், மிகவும் ருசியாக இருக்கும்.

அம்மா செய்து தரும் பொழுது அது சாதாரணமாகத்தான் தெரிந்தது. திருமணத்திற்கு பிறகு நான் இதனை ஒரே முறை தான் செய்து சாப்பிட்டுள்ளேன். அம்மா வீட்டில், ஒரு பலகாரம் செய்தால் அதையே அனைவரும் சாப்பிடுவோம். பிடிக்குமா பிடிக்காதா என்பது பொறுத்து ஒவ்வொருவருக்கும் ஸ்பெஷளாக செய்ய மாட்டோம்.

இந்த உப்மா அடையை டீ காபியுடன் செய்து கொடுத்தால் சிற்றுண்டியாக சாப்பிடுவர். ஆனால் இதையே இரவு உணவாக செய்தால் யாருக்கும் இறங்காது. அதனாலேயே இதனை நான் மெனக்கெட்டு செய்வதில்லை. செய்தாலும் நான் நிறைய சாப்பிட்டுவிடுவேன் என்பதால் செய்வதே இல்லை.

அரிசி உப்மா அல்லது உப்மா கொழுக்கட்டை செய்வது போலவே தான், சற்றே வேறு விதம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 கப்

துவரம் பருப்பு – 2 மேஜைக்கரண்டி

மிளகு – 1 தேக்கரண்டி

ஜீரகம் – 3/4 தேக்கரண்டி

தேங்காய் – 1 கப்

தண்ணீர் – 2 & 1/4 கப்

தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி

உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க

எண்ணெய் –  1 தேக்கரண்டி

கடுகு – 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் – 1 சிட்டிகை

கறிவேப்பிலை – 1 ஆர்க்கு

கொத்தமல்லி இலை (தேவையென்றால்)  – 1 மேஜைக்கரண்டி

உப்மா அடை செய்முறை:

 1. அரிசி மற்றும் பருப்பை கழுவி குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின், தண்ணீரை வடித்து ஒரு சுத்தமான துண்டில் தண்ணீரை வடித்து பரப்பவும். 
 2. முதலில் மிளகு மற்றும் ஜீரகத்தை கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு,  அரிசி மற்றும் பருப்பை சேர்த்து, படத்தில் காட்டியவாறு ரவா போல பொடியாக கவனமாக அரைக்கவும்.
 3. ஒரு கடாயை சூடு செய்து, எண்ணெய் சேர்த்து,  தாளிக்க வேண்டிய பொருட்களை வரிசையாக சேர்க்கவும். 
 4. தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். துருவிய தேங்காய், உப்பு  சேர்க்கவும்.
 5. பின்னர் அரைத்த  அரிசி கலவை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
 6. குறைந்த தீயில் 4-5 நிமிடங்கள் மூடி வேக வைக்கவும். தேங்காய் எண்ணெய் சேர்க்கவும் (விரும்பினால்). நன்கு கலந்து அடுப்பை அணைக்கவும்.
 7. கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன் ஒரே அளவு உருண்டைகளாக எடுத்து, மொத்தமான அடைகளாகத் தட்டவும். 
 8. நான் சிறு சிறு அடைகளாக ஒரு மூடி கொண்டு வெட்டி செய்தேன். நீங்கள், சாதாரணமாக பெரிய அடைகளாகத் தட்டலாம்.  
 9. ஒவ்வொரு முறையும் கைகளில் எண்ணெய் தடவிக்கொள்ளவும். பாலிதீன் பை அல்லது வாழை இலையில் தட்டலாம்.
 10. தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, சூடானவுடன், மிதமான தீயில் இரு புறமும் பொன்னிறமாகும் வரை சுட்டெடுக்கவும். 

upma adai method
Author: 
Recipe type: snack
Cuisine: Indian
Prep time: 
Cook time: 
Total time: 
Serves: 16
 
உப்மா அடை, அம்மா செய்யும் பலகாரத்தில் எனக்கு மிகவும் பிடித்தது. அரிசி, துவரம் பருப்பு, மிளகு ஜீரகம் கொண்டு செய்யும் இந்த பலகாரம், மிகவும் ருசியாக இருக்கும்.
Ingredients
 • பச்சரிசி - 1 கப்
 • துவரம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி
 • மிளகு - 1 தேக்கரண்டி
 • ஜீரகம் - ¾ தேக்கரண்டி
 • தேங்காய் - 1 கப்
 • தண்ணீர் - 2 & ¼ கப்
 • தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
 • உப்பு - தேவைக்கேற்ப
 • தாளிக்க
 • எண்ணெய் - 1 தேக்கரண்டி
 • கடுகு - ½ தேக்கரண்டி
 • பெருங்காயம் - 1 சிட்டிகை
 • கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
 • கொத்தமல்லி இலை (தேவையென்றால்) - 1 மேஜைக்கரண்டி
Instructions
 1. அரிசி மற்றும் பருப்பை கழுவி குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின், தண்ணீரை வடித்து ஒரு சுத்தமான துண்டில் தண்ணீரை வடித்து பரப்பவும்.
 2. முதலில் மிளகு மற்றும் ஜீரகத்தை கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு, அரிசி மற்றும் பருப்பை சேர்த்து, படத்தில் காட்டியவாறு ரவா போல பொடியாக கவனமாக அரைக்கவும்.
 3. ஒரு கடாயை சூடு செய்து, எண்ணெய் சேர்த்து, தாளிக்க வேண்டிய பொருட்களை வரிசையாக சேர்க்கவும்.
 4. தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். துருவிய தேங்காய், உப்பு சேர்க்கவும்.
 5. பின்னர் அரைத்த அரிசி கலவை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
 6. குறைந்த தீயில் 4-5 நிமிடங்கள் மூடி வேக வைக்கவும். தேங்காய் எண்ணெய் சேர்க்கவும் (விரும்பினால்). நன்கு கலந்து அடுப்பை அணைக்கவும்.
 7. கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன் ஒரே அளவு உருண்டைகளாக எடுத்து, மொத்தமான அடைகளாகத் தட்டவும்.
 8. நான் சிறு சிறு அடைகளாக ஒரு மூடி கொண்டு வெட்டி செய்தேன். நீங்கள், சாதாரணமாக பெரிய அடைகளாகத் தட்டலாம்.
 9. ஒவ்வொரு முறையும் கைகளில் எண்ணெய் தடவிக்கொள்ளவும். பாலிதீன் பை அல்லது வாழை இலையில் தட்டலாம்.
 10. தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, சூடானவுடன், மிதமான தீயில் இரு புறமும் பொன்னிறமாகும் வரை சுட்டெடுக்கவும்.

தேங்காய் சட்னி அல்லது கொத்தமல்லி சட்னி எல்லாவற்றிலும் சிறந்தது!

Raks Anand

leave a comment

Rate this recipe:  

Create AccountLog In Your Account