பாலக் பீஸ் புலாவ்- பாலக் எனப்படும் பசலை கீரை உபயோகப்படுத்தி புலாவ் செய்வது எப்படி என்ற செய்முறையை பார்ப்போம்.
நம் தமிழ் நாட்டில் கிடைக்கும் பசலைக் கீரை, நார்த் இந்தியாவில் கிடைப்பதிலிருந்து வித்தியாசமானது. இது நார்த் இந்தியன் பாலக் கீரை கொண்டு செய்யும் ஒரு புலாவ். நான் இங்கு frozen பீஸ் உபயோகித்துள்ளேன். நீங்கள், உங்களுக்கு விருப்பமான காய்கறிகளோ அல்லது ஸ்வீட் கார்ன் கூட உபயோகிக்கலாம்.
குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை, எல்லோர்க்கும் மிகவும் பிடிக்கும். பீஸ் புலாவ் போலவே தான் ஆனால், பாலக் கீரை சேர்த்துள்ளோம்.
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – 1 கப்
பாலக் கீரை, பொடியாக நறுக்கியது – 1 & 1/2 கப்
பச்சை பட்டாணி – 1/2 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
சக்கரை – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
தண்ணீர் – 1 & 3/4 கப்
தாளிக்க
நெய் – 1 மேஜைக்கரண்டி
பட்டை – 1/2 அங்குல துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
ஷாஹி ஜீரா – 3/4 தேக்கரண்டி
பாலக் பீஸ் புலாவ் செய்முறை:
- பஸ்மதி அரிசியை குறைந்தது 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பாலக் கீரையை, சுத்தப்படுத்தி, பொடியாக நறுக்கவும்.
- ஒரு சிறிய குக்கரில் நெய் ஊற்றி சூடு செயது, பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், கடைசியாக ஷாஹி ஜீரா சேர்க்கவும். நீளவாக்கில் வெட்டிய வெங்காயம், கீரிய பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- இதில், இஞ்சி பூண்டு விழுது, மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
- நறுக்கிய பாலக் கீரை, சக்கரை சேர்த்து, சுருங்கும் வரை வதக்கவும்.
- ஊறவைத்த அரிசியை தண்ணீர் வடித்து சேர்க்கவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, 1 & 3/4 கப் தண்ணீர் சேர்த்து, கொதி வந்தவுடன், மூடவும்.
- மிதமான தீயில் 2 விசில் வைக்கவும். ஸ்ட்டீம் தானாக இறங்கியவுடன், மெதுவாக ஓரிரு முறை கிளறிவிடவும்/ அல்லது வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.
குறிப்புகள்
- நான் பிரோசன் பட்டாணி உபயோகித்துள்ளேன். காய்ந்த பட்டாணி என்றால் ஊறவைத்து உபயோகிக்க வேண்டும்.
- இதர காய்களையும் சேர்த்து இந்த பாலக் புலாவை செய்யலாம்.
காய்கறி தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

- பாசுமதி அரிசி - 1 கப்
- பாலக் கீரை பொடியாக நறுக்கியது - 1 & 1/2 கப்
- பச்சை பட்டாணி - 1/2 கப்
- வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 3
- சக்கரை - 1/4 தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
- தண்ணீர் - 1 & 3/4 கப்
- தாளிக்க
- நெய் - 1 மேஜைக்கரண்டி
- பட்டை - 1/2 அங்குல துண்டு
- கிராம்பு - 2
- ஏலக்காய் - 1
- ஷாஹி ஜீரா - 3/4 தேக்கரண்டி
- பஸ்மதி அரிசியை குறைந்தது 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பாலக் கீரையை, சுத்தப்படுத்தி, பொடியாக நறுக்கவும்.
- ஒரு சிறிய குக்கரில் நெய் ஊற்றி சூடு செயது, பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், கடைசியாக ஷாஹி ஜீரா சேர்க்கவும். நீளவாக்கில் வெட்டிய வெங்காயம், கீரிய பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- இதில், இஞ்சி பூண்டு விழுது, மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
- நறுக்கிய பாலக் கீரை, சக்கரை சேர்த்து, சுருங்கும் வரை வதக்கவும்.
- ஊறவைத்த அரிசியை தண்ணீர் வடித்து சேர்க்கவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, 1 & 3/4 கப் தண்ணீர் சேர்த்து, கொதி வந்தவுடன், மூடவும்.
- மிதமான தீயில் 2 விசில் வைக்கவும். ஸ்ட்டீம் தானாக இறங்கியவுடன், மெதுவாக ஓரிரு முறை கிளறிவிடவும்/ அல்லது வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.
நான் பிரோசன் பட்டாணி உபயோகித்துள்ளேன். காய்ந்த பட்டாணி என்றால் ஊறவைத்து உபயோகிக்க வேண்டும்.
இதர காய்களையும் சேர்த்து இந்த பாலக் புலாவை செய்யலாம்.