
காலிஃபிளவர் ரசம் செய்முறை – காலிஃளார் ரசம் நான் சுவைத்த ரசங்களில் மிகவும் பிடித்த ஒன்று. இம்முறை இந்தியா காலிஃபிளவர் வாங்கிய பொழுது, அதை வைத்து ரசம் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். முதலில் மிளகு கறி செய்தேன், பிறகு, இதனை செய்து பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருந்தது. பட்டை, சோம்பு சேர்ப்பதால் மிகவும் வாசனையாக இருந்தது.
தேவையான பொருட்கள்:
காலிஃபிளவர், பொடியாக நறுக்கியது – 1 கப்
வேகவைத்த துவரம் பருப்பு – 1/4 கப்
தக்காளி – 1
பூண்டு – 5 பற்கள்
புளி – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
சக்கரை – 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
ரசப்பொடி : வர கொத்தமல்லி – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
ஜீரகம் – 1/2 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் – 2
தாளிக்க : எண்ணெய் – 2 தேக்கரண்டி
பட்டை – 1 சிறிய துண்டு
சோம்பு – 1/2 தேக்கரண்டி
கருவேப்பில்லை – 1 அரக்கு
காலிஃபிளவர் ரசம் செய்முறை :
- புளியை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். 1 கப் தண்ணீரில் புலி கரைசல் எடுத்து வைத்துக்கொள்ளவும். காலிஃபிளவரை , கொதிநீரில் உப்பு சேர்த்து, மூழ்க்கி வைக்கவும்.
- 2 கப் தண்ணீரில், ஒரு பெரிய பாத்திரத்தில், காலிஃபிளவர், கொத்தமல்லி தக்காளி, மிளகாய் மிளகாய், மஞ்சள் மற்றும் 1/2 உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- எண்ணெய் சூடு செய்து, பட்டை சோம்பு, கருவேப்பில்லை சேர்த்து தாளித்து, ரசத்தில் சேர்க்கவும். காலிஃபிளவர் வெந்தவுடன், புலி கரைசல் சேர்க்கவும்.
- ரசப்பொடிக்கு அரைக்கவேண்டிய பொருட்களை சேர்த்து, கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
- கொதிக்கும் ரசத்தில் இந்த பொடியினை சேர்க்கவும்.
- வேகவைத்த பருப்பு சேர்த்து, தண்ணீர் அளவினை சரிசெய்யவும்.
- சர்க்கரையும் மீதமுள்ள உப்பும் சேர்க்கவும். கொத்தமல்லி இலைகளுடன் மேலே தூவி, அடுப்பை அணைக்கவும்.
குறிப்புகள்
- உங்களுக்கு பட்டை, சோம்பு பிடிக்கவில்லை என்றால் வெறும் கடுகு, ஜீரகம் தாளித்துக்கொள்ளலாம்.
- கடையில் வாங்கிய ரசப்பொடி சேர்த்தும் செய்யலாம்.
காளிஃபிளவர் ரசத்தை, சாதத்தில் சேர்த்தோ, அப்படியேவோ சாப்பிடலாம்.

- காலிஃபிளவர் பொடியாக நறுக்கியது - 1 கப்
- வேகவைத்த துவரம் பருப்பு - 1/4 கப்
- தக்காளி - 1
- பூண்டு - 5 பற்கள்
- புளி - 1 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- சக்கரை - 1/4 தேக்கரண்டி
- கொத்தமல்லி இலை - 2 தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
- ரசப்பொடி : வர கொத்தமல்லி - 1 தேக்கரண்டி
- மிளகு - 1 தேக்கரண்டி
- ஜீரகம் - 1/2 தேக்கரண்டி
- சிகப்பு மிளகாய் - 2
- தாளிக்க : எண்ணெய் - 2 தேக்கரண்டி
- பட்டை - 1 சிறிய துண்டு
- சோம்பு - 1/2 தேக்கரண்டி
- கருவேப்பில்லை - 1 ஆர்க்கு
- புளியை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். 1 கப் தண்ணீரில் புலி கரைசல் எடுத்து வைத்துக்கொள்ளவும். காலிஃளாரை , கொதிநீரில் உப்பு சேர்த்து, மூழ்க்கி வைக்கவும்.
- கப் தண்ணீரில், ஒரு பெரிய பாத்திரத்தில், காலிஃபிளவர், கொத்தமல்லி தக்காளி, மிளகாய் மிளகாய், மஞ்சள் மற்றும் 1/2 உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- எண்ணெய் சூடு செய்து, பட்டை சோம்பு, கருவேப்பில்லை சேர்த்து தாளித்து, ரசத்தில் சேர்க்கவும்.காலிஃளார் வெந்தவுடன், புலி கரைசல் சேர்க்கவும்.
- ரசப்பொடிக்கு அரைக்கவேண்டிய பொருட்களை சேர்த்து, கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
- கொதிக்கும் ரசத்தில் இந்த பொடியினை சேர்க்கவும்.
- வேகவைத்த பருப்பு சேர்த்து, தண்ணீர் அளவினை சரிசெய்யவும்.
- சர்க்கரையும் மீதமுள்ள உப்பும் சேர்க்கவும். கொத்தமல்லி இலைகளுடன் மேலே தூவி, அடுப்பை அணைக்கவும்.
உங்களுக்கு பட்டை, சோம்பு பிடிக்கவில்லை என்றால் வெறும் கடுகு, ஜீரகம் தாளித்துக்கொள்ளலாம்.
கடையில் வாங்கிய ரசப்பொடி சேர்த்தும் செய்யலாம்.
Looks very nice, Raji. Let me try once and give feedback.
Sure, try and let me know.