கடலை மாவு தேங்காய் பர்பி, kadalai mavu thengai barbi

கடலை மாவு தேங்காய் பர்பி. இது மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு இனிப்பு. வெறும் 4  பொருட்களை கொண்டு 1/2 மணி நேரத்திற்குள் செய்து முடித்து விடலாம்.

என்னிடம் இருக்கும் ராணி சமையல் என்னும் புத்தகத்தில் இந்த ரெசிபியை நான் கற்றுக்கொண்டேன். அதில், இன்னும் அதிகமாக நெய் உபயோகித்திருந்தார்கள். மேலும் இதனை தேங்காய் மைசூர் பாக் என பெயரிட்டிருந்தனர். எவ்வளவுக்கெவ்வளவு நெய் சேர்கிறோமோ, அந்த அளவு மனமும், மிருதுவாகவும் வரும். ஆனால் நான் அதில் குறிப்பிடருந்ததில் பாதி அளவு மட்டுமே உபயோகித்ததால் இது பர்பி என கூறிக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

கடலை மாவு – 1/2 கப்

துருவிய தேங்காய் – 1/2 கப்

சக்கரை – 1 கப்

நெய் – 1/2 கப்

செய்முறை

 1. ஒரு ட் ரேயில் நெய் தடவி தயாராக வைக்கவும். நான் அடியில் பட்டர் பேப்பர்/ பேக்கிங் ஷீட் உபயோகித்துள்ளேன். ஒரு அடி கனமான பாத்திரத்தில், 1/2 கப் தண்ணீர் சேர்த்து, சக்கரையுடன் மிதமான தீயில்   கொதிக்க விடவும். ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்கவேண்டும். அதாவது, கரண்டியின் பின் புறம் இருக்கும் பாகை ஆள்காட்டி விரலில் வழித்து, கட்டை விரலின் நடுவில் ஒட்டி பார்த்தால் ஒரு மெல்லிய கம்பி வரவேண்டும்.besan-burfi-step1
 2. இந்த நிலையில் தேங்காய் சேர்த்து கலந்துவிட்டு, சலித்த கடலை மாவை தூவினாற்போல சேர்க்கவும். நன்கு வேகமாக கட்டி தட்டாமல் கலக்கவும்.besan-burfi-step2
 3. நன்கு கலந்தவுடன், 1/2 கப் நெய்யை, ஒரு சமயத்தில்  2 ஸ்பூன் விகிதம் ஊற்றி கலக்கவும். நெய் உள்ள வாங்கியபின் அதே போல் மேலும் இரண்டு ஸ்பூன் சேர்த்து கிளறவும். இதே போல 1/2 கப் நெய்யும் ஊற்றி கிளறிய பின், ஓரங்களில் ஒட்டாமல் வரும்.besan-burfi-step3
 4. முதலில் ஓரங்களில் நுரைத்தார் போலவும், பிறகு அடியில் நுரைத்தாற்போலவும் இருக்கும். பிறகு புராக் கலவையும் வெளிர் நிறமாக, நுரைத்து காணப்படும் பொழுது, நெய் தடவிய தட்டில் கொட்டவும்.besan-burfi-step4
 5. கை பொரும் சூட்டிற்கு வரும் வரை ஆரிய பின்,தட்டை தலை கீழாக   தட்டவும். பட்டர் பேப்பரை எடுத்துவிட்டு, துடுகளாக வெட்டவும். besan-burfi-step5

கடலை மாவு தேங்காய் பர்பி தயார்!

கடலை மாவு தேங்காய் பர்பி

கடலை மாவு தேங்காய் பர்பி
Author: 
Recipe type: sweet
Cuisine: Indian
Prep time: 
Cook time: 
Total time: 
Serves: 12
 
கடலை மாவு தேங்காய் பர்பி. இது மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு இனிப்பு. வெறும் 4 பொருட்களை கொண்டு ½ மணி நேரத்திற்குள் செய்து முடித்து விடலாம்.
Ingredients
 • கடலை மாவு - ½ கப்
 • துருவிய தேங்காய் - ½ கப்
 • சக்கரை - 1 கப்
 • நெய் - ½ கப்
Instructions
 1. ஒரு ட் ரேயில் நெய் தடவி தயாராக வைக்கவும். நான் அடியில் பட்டர் பேப்பர்/ பேக்கிங் ஷீட் உபயோகித்துள்ளேன். ஒரு அடி கனமான பாத்திரத்தில், ½ கப் தண்ணீர் சேர்த்து, சக்கரையுடன் மிதமான தீயில் கொதிக்க விடவும். ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்கவேண்டும். அதாவது, கரண்டியின் பின் புறம் இருக்கும் பாகை ஆள்காட்டி விரலில் வழித்து, கட்டை விரலின் நடுவில் ஒட்டி பார்த்தால் ஒரு மெல்லிய கம்பி வரவேண்டும்.
 2. இந்த நிலையில் தேங்காய் சேர்த்து கலந்துவிட்டு, சலித்த கடலை மாவை தூவினாற்போல சேர்க்கவும். நன்கு வேகமாக கட்டி தட்டாமல் கலக்கவும்.
 3. நன்கு கலந்தவுடன், ½ கப் நெய்யை, ஒரு சமயத்தில் 2 ஸ்பூன் விகிதம் ஊற்றி கலக்கவும். நெய் உள்ள வாங்கியபின் அதே போல் மேலும் இரண்டு ஸ்பூன் சேர்த்து கிளறவும். இதே போல ½ கப் நெய்யும் ஊற்றி கிளறிய பின், ஓரங்களில் ஒட்டாமல் வரும்.
 4. முதலில் ஓரங்களில் நுரைத்தார் போலவும், பிறகு அடியில் நுரைத்தாற்போலவும் இருக்கும். பிறகு புராக் கலவையும் வெளிர் நிறமாக, நுரைத்து காணப்படும் பொழுது, நெய் தடவிய தட்டில் கொட்டவும்.
 5. கை பொரும் சூட்டிற்கு வரும் வரை ஆரிய பின்,தட்டை தலை கீழாக தட்டவும். பட்டர் பேப்பரை எடுத்துவிட்டு, துடுகளாக வெட்டவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rate this recipe: