சாக்லேட் பேடா, chocolate peda

சாக்லேட் பேடா

சாக்லேட் பேடா செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் கற்றுக்கொள்வோம். ஸ்வீட் கடைகளில் கிடைக்கும் பேடாக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சாக்லேட் பேடா நான் சாப்பிட்டது இல்லை, ஆனால் இணையதளத்தில் நிறையப் பார்த்திருக்கிறேன். கோயா உபயோகித்து நான் முயற்சித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. இந்தத் தீபாவளிக்கு, உங்கள் குழந்தைகளுக்கும் இதனைச் செய்து தரலாமே.

சாக்லேட் பேடா

சாக்லேட் பேடா செய்ய தேவையான பொருட்கள்

கோயா – 1 கப்

கோக்கோ பவுடர் – 2 மேஜைக்கரண்டி

சக்கரை – 1/4 கப்

வெண்ணிலா எசென்ஸ் – 1/2 தேக்கரண்டி

பொடியாக வெட்டிய பாதாம் – 3

சீவிய பாதாம் – 1 மேஜைக்கரண்டி

வெண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை

  1. ஒரு அடி கனமான பாத்திரத்தில், கோயா, சாக்லேட் பவுடர், சக்கரை, வெண்ணெய், பொடியாக வெட்டிய பாதாம்,  எல்லாவற்றையும் சேர்த்து  அடுப்பில் வைத்துச் சூடு செய்யவும். தீ மிதமாக இருக்கவேண்டும். நன்கு கலந்து விடவும். எல்லாம் கலந்து நன்கு இளகும்.chocolate-peda-step1
  2. இப்பொழுது, வெண்ணிலா எஸ்ஸன்ஸ் சேர்க்கவும். மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருக்கவும். ஓரங்கள் ஒட்டாமல் திரளும். chocolate-peda-step2
  3. பிறகு கெட்டியாகி, கரண்டியுடன் சேர்ந்து கலவைச் சுற்றும். அப்பொழுது அடுப்பை அணைத்து விடவும்.chocolate-peda-step3
  4. ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும். கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன், கையில் நெய் தடவிக்கொண்டு, சம அளவு உருண்டைகளாகப் பிரிக்கவும். சிறிய பாதுஷா வடிவில் தட்டலாம். அல்லது ஒரு சிறிய வட்டமான மூடியில் நெய் தடவி,  சீவிய பாதாம் சிறிது தூவி, அதன் மேல் சாக்லேட் கோயா கலவையை வைத்து, வட்டமாகத் தட்டவும். பேக்கிங்  ஷீட்டில் வைத்து 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கலாம். chocolate-peda-step4

குறிப்புகள்

  • தீ எப்பொழுதும் நிதானமாக வைக்கவேண்டும். தீயைத் தூக்கிவைக்க வேண்டாம்.
  • முதலில் பிசுபிசுப்பாக இருப்பது போல இருக்கும். ஆனால் பிறகு, காய்ந்து விடும். 
  • ஓரிரு நாட்களில் சாப்பிட்டுவிடவேண்டும். 

 

சாக்லேட் பேடா, chocolate peda
Prep Time
15 mins
Cook Time
15 mins
Total Time
30 mins
 
சாக்லேட் பேடா செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் கற்றுக்கொள்வோம். இந்தத் தீபாவளிக்கு, உங்கள் குழந்தைகளுக்கும் இதனைச் செய்து தரலாமே.
Course: Sweets
Cuisine: Indian
Servings: 12
Author: Raksnanad
Ingredients
  • கோயா - 1 கப்
  • கோகோ பவுடர் - 2 மேஜைக்கரண்டி
  • சக்கரை - 1/4 கப்
  • வெண்ணிலா எசென்ஸ் - 1/2 தேக்கரண்டி
  • பொடியாக வெட்டிய பாதாம் - 3
  • சீவிய பாதாம் - 1 மேஜைக்கரண்டி
  • வெண்ணெய் - 1 தேக்கரண்டி
Instructions
  1. ஒரு அடி கனமான பாத்திரத்தில், கோயா, சாக்லேட் பவுடர், சக்கரை, வெண்ணெய், பொடியாக வெட்டிய பாதாம், எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பில் வைத்துச் சூடு செய்யவும். தீ மிதமாக இருக்கவேண்டும். நன்கு கலந்து விடவும். எல்லாம் கலந்து நன்கு இளகும்.
  2. இப்பொழுது, வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவும். மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருக்கவும்.
  3. ஓரங்கள் ஒட்டாமல் திரளும்.
  4. பிறகு கெட்டியாகி, கரண்டியுடன் சேர்ந்து கலவைச் சுற்றும். அப்பொழுது அடுப்பை அணைத்து விடவும்.
  5. ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும். கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன், கையில் நெய் தடவிக்கொண்டு, சம அளவு உருண்டைகளாகப் பிரிக்கவும். சிறிய பாதுஷா வடிவில் தட்டலாம். அல்லது ஒரு சிறிய வட்டமான மூடியில் நெய் தடவி, சீவிய பாதாம் சிறிது தூவி, அதன் மேல் சாக்லேட் கோயா கலவையை வைத்து, வட்டமாகத் தட்டவும். பேக்கிங் ஷீட்டில் வைத்து 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கலாம்.
Recipe Notes

தீ எப்பொழுதும் நிதானமாக வைக்கவேண்டும். தீயைத் தூக்கிவைக்க வேண்டாம்.
முதலில் பிசுபிசுப்பாக இருப்பது போல இருக்கும். ஆனால் பிறகு, காய்ந்து விடும்.
ஓரிரு நாட்களில் சாப்பிட்டுவிடவேண்டும்.

Author: Raks Anand

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *