
வெள்ளிப் பொருட்களை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
பொதுவாக, வெள்ளி, செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்கள் உபயோகிக்கும் பொழுது, கருத்து போவது வழக்கம். இதனை சுத்தம் செய்வது கடினமாகிவிடும். புளி, எலுமிச்சை போன்றவற்றை உப்புடன் சேர்த்து துலக்கினால் பளிச்சென்று ஆகும்.
ஆனால் இங்கே எளிய முறை ஒன்றை பார்ப்போம்.
இதில், அலுமினியம் foil மற்றும் சோடா உப்பு உபயோகிக்கின்றோம்.
தேவையான பொருட்கள்:
வெள்ளிப் பொருட்களை கொள்ளும் அளவிற்கு ஒரு பாத்திரம்
அலுமினியம் foil
சோடா உப்பு
செய்முறை:
- வெள்ளிப் பொருட்கள் முழுகும் அளவுக்கு தேவையான தண்ணீரை, ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும். அதில் அலுமினியம் foil -ஐ கிழித்து போடவும். சோடா உப்பு (1 மேஜைக்கரண்டி) சேர்க்கவும்.
- வெள்ளிப்பொருட்களை மூழ்கி வைக்கவும். 2 நிமிடம் கொதிக்க விடவும்.
- பிறகு, எல்லா புறமும் பாத்திரத்தை திருப்பி விடவும்.பாத்திரம் பளிச்சென்று ஆனவுடன் அடுப்பை அணைக்கவும் (2-5 நிமிடங்கள்). தேவைப்பட்டால், பாத்திரம் துலக்கும் நார் வைத்து லேசாகத் தேய்க்கவும்.
இந்த முறையில் சுத்தம் செய்யும் வெள்ளி பொருட்கள், நீண்ட நாட்கள் நிறம் மாறாமல் இருக்கும்.