
சேமியா பாயசம், பாயச வகைகளில் மிகவும் எளிதான, மற்றும் எல்லோர் வீட்டிலும் செய்யக்கூடிய ஒன்று. பண்டிகை நாட்கள் மற்றும் பிறந்த நாட்கள் என எல்லா விசேஷமான நாட்களிலும் செய்யலாம்.
சமையல் கற்றுக்கொள்பவர்களுக்கு இது பயன்படும் என நம்புகிறேன்.
தேவையான பொருட்கள்
சேமியா – 1/2 கப்
சக்கரை – 1/2 கப்
பால் – 1/2 கப்
நெய் – 2 தேக்கரண்டி
முந்திரி – 6
உலர் திராட்சை – 12
ஏலக்காய் – 1
உப்பு – ஒரு சிட்டிகை
தண்ணீர் – 2 கப்
செய்முறை:
- ஒரு அடி கனமான பாத்திரத்தில், நெய் சூடு செய்து, மிதமான தீயில், முதலில் உடைத்த முந்திரிப் பருப்பை, பொன்னிறமாக வறுக்கவும். வறுபட்டதும், திராட்சையை சேர்த்து, உப்பும் வரை பிரட்டவும். தனியே ஒரு கிண்ணத்தில் எடுத்துவைத்துக்கொள்ளவும். அதே நெய்யில், சேமியாவை சேர்த்து வறுக்கவும். தீ எப்பொழுதும் மிதமாகவே வைத்துக்கொள்ளவும்.
- பொன்னிறமாக ஆங்காங்கே மாறியதும், தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் உப்பு, வறுத்த சேமியா சேர்க்கவும். சேமியாவை தூவினாற்போல சேர்த்து, கலக்கவும். இல்லை என்றல் கட்டி பிடிக்கும். சேமியா மிருதுவாக வேகும் வரை கொதிக்கவிடவும். (4-5 நிமிடங்கள்)
- சக்கரை, ஏலக்காய் சேர்த்து கலக்கவும். 2 நிமிடங்கள் மேலும் கொதிக்க விடவும். மிதமான தீயில் வைத்து, பால் சேர்க்கவும்.
- கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.
உங்கள் கவனத்திற்கு:
- ஆரிய பின், கெட்டியாகினால், பாலை சூடு செய்து சேர்த்து கலந்துகொள்ளலாம். சக்கரை தேவைப்பட்டன, பாலுடன் சேர்த்துக்கொள்ளவும்.
- சக்கரை அளவை குறைத்துக்கொண்டு, கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்துக்கொள்ளலாம்.

சேமியா பாயசம் செய்முறை, semiya payasam in tamil
Prep Time
2 mins
Cook Time
15 mins
Total Time
17 mins
சேமியா பாயசம், பாயச வகைகளில் மிகவும் எளிதான, மற்றும் எல்லோர் வீட்டிலும் செய்யக்கூடிய ஒன்று. பண்டிகை நாட்கள் மற்றும் பிறந்த நாட்கள் என எல்லா விசேஷமான நாட்களிலும் செய்யலாம்.
Course: Dessert
Cuisine: Indian
Servings: 3
Ingredients
- சேமியா - 1/2 கப்
- சக்கரை - 1/2 கப்
- பால் - 1/2 கப்
- நெய் - 2 தேக்கரண்டி
- முந்திரி - 6
- உலர் திராட்சை - 12
- ஏலக்காய் - 1
- உப்பு - ஒரு சிட்டிகை
- தண்ணீர் - 2 கப்
Instructions
- ஒரு அடி கனமான பாத்திரத்தில், நெய் சூடு செய்து, மிதமான தீயில், முதலில் உடைத்த முந்திரிப் பருப்பை, பொன்னிறமாக வறுக்கவும்.
- வறுபட்டதும், திராட்சையை சேர்த்து, உப்பும் வரை பிரட்டவும்.
- தனியே ஒரு கிண்ணத்தில் எடுத்துவைத்துக்கொள்ளவும்.
- அதே நெய்யில், சேமியாவை சேர்த்து வறுக்கவும். தீ எப்பொழுதும் மிதமாகவே வைத்துக்கொள்ளவும்.
- பொன்னிறமாக ஆங்காங்கே மாறியதும், தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் உப்பு, வறுத்த சேமியா சேர்க்கவும். சேமியாவை தூவினாற்போல சேர்த்து, கலக்கவும். இல்லை என்றல் கட்டி பிடிக்கும்.
- சேமியா மிருதுவாக வேகும் வரை கொதிக்கவிடவும். (4-5 நிமிடங்கள்)
- சக்கரை, ஏலக்காய் சேர்த்து கலக்கவும். 2 நிமிடங்கள் மேலும் கொதிக்க விடவும்.
- மிதமான தீயில் வைத்து, பால் சேர்க்கவும். கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.
Recipe Notes
ஆரிய பின், கெட்டியாகினால், பாலை சூடு செய்து சேர்த்து கலந்துகொள்ளலாம். சக்கரை தேவைப்பட்டன, பாலுடன் சேர்த்துக்கொள்ளவும்.
சக்கரை அளவை குறைத்துக்கொண்டு, கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்துக்கொள்ளலாம்.