
புளிக்கூழ், அரிசியை ஊறவைத்து அரைத்து செய்யும் முறை. இதே போல அரிசி மாவு வைத்தும் புளிக்கூழ் செய்யலாம். இதை புளி உப்மா என்றும் கூறுவர்.
புளிக்கூழ் , மோர்க்கூழ் காலை அல்லது இரவு உணவுக்கு அம்மா செய்வார். இது எனக்கும் என் அண்ணனுக்கும் பிடித்த ஒன்று. வெறும் அரிசி தோசை மாவு மீர்ந்து விட்டாலும் அந்த புளித்த மாவை வைத்து கூழ் செய்து தருவார்.
இட்லி அரிசியை ஊறவைத்து, மாவாக அரைத்து, புளிக்கரைசல் சேர்த்து கிண்டுவது இது. சாப்பாடு அரிசியாக இருந்தாலும், பச்சரிசியாக இருந்தாலும் நன்றாக வரும். ஆனால் இட்லி அரிசியில் செய்வதில் சுவை அதிகம் இருப்பதாக எனக்கு தெரிகிறது.
மாவை சிறிது புளிக்க வைத்தால் இன்னும் சுவை கூடும், ஆனால் இது புளிக்கூழ் தான் என்பதால் புளிக்க வைக்க தேவை இல்லை.
புளிக்கூழ் தேவையான பொருட்கள்
இட்லி அரிசி – 1/2 கப்
புளி – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
தாளிக்க
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் – 3
பெருங்காயம் – 1/8 தேக்கரண்டி
கருவேப்பில்லை – 1 ஆர்க்கு
புளிக்கூழ் செய்முறை:
- அரிசியை களைந்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். புளியை 1/4 கப் வெந்நீரில் ஊறவைக்கவும்.
- அரிசி ஊறியதும், தண்ணீரை வடித்துவிட்டு, 1/2 கப் தண்ணீர் சேர்த்து மை போல அரைக்கவும்.
- கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடானதும் கடுகு சேர்த்து, வெடித்ததும் உளுந்து, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து கலக்கவும். 2 கப் தண்ணீர் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- மேலும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து, தயாராக புளிக்கரைசல் வைக்கவும்.
- புளிக்கரைசல், அரைத்த மாவு சேர்த்து கலக்கவும். (தண்ணீர் கொதிப்பதற்கு முன் சேர்க்கவேண்டும்.
- நன்கு கலந்து கிண்டிக்கொண்டே இருக்கவும். நிறம் மாறி கெட்டியானவுடன், மிதமான தீயில் வைக்கவும்.
- மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும். 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து இறக்கவும். ஒட்டாமல் பதத்தில் இருக்கும்.
குறிப்புகள்
- அரைத்த அரிசி மாவு, தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கலந்து வைத்துக்க்கொண்டு, தாளித்த பின் ஊற்றி கிளறலாம்.
- கடையில் வாங்கும் அரிசி மாவு வைத்து செய்வதென்றால் 3/4 கப் சேர்த்து செய்யலாம்.
- வரகு, குதிரைவாலி, சாமை போன்ற சிறுதானியங்கள் கொண்டும் இதே போல செய்யலாம்.

- இட்லி அரிசி - 1/2 கப்
- புளி - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
- சிகப்பு மிளகாய் - 3
- பெருங்காயம் - 1/8 தேக்கரண்டி
- கருவேப்பில்லை - 1 ஆர்க்கு
- அரிசியை களைந்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். புளியை 1/4 கப் வெந்நீரில் ஊறவைக்கவும்.
- அரிசி ஊறியதும், தண்ணீரை வடித்துவிட்டு, 1/2 கப் தண்ணீர் சேர்த்து மை போல அரைக்கவும்.
- கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடானதும் கடுகு சேர்த்து, வெடித்ததும் உளுந்து, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து கலக்கவும்.
- கப் தண்ணீர் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- புலி கரைசல் மேலும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து, தயாராக வைக்கவும்.
- புளிக்கரைசல், அரைத்த மாவு சேர்த்து கலக்கவும். (தண்ணீர் கொதிப்பதற்கு முன் சேர்க்கவேண்டும்.
- நன்கு கலந்து கிண்டிக்கொண்டே இருக்கவும்.
- நிறம் மாறி கெட்டியானவுடன், மிதமான தீயில் வைக்கவும்.
- மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும். 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து இறக்கவும். ஒட்டாமல் பதத்தில் இருக்கும்.
அரைத்த அரிசி மாவு, தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கலந்து வைத்துக்க்கொண்டு, தாளித்த பின் ஊற்றி கிளறலாம்.
கடையில் வாங்கும் அரிசி மாவு வைத்து செய்வதென்றால் 3/4 கப் சேர்த்து செய்யலாம்.
வரகு, குதிரைவாலி, சாமை போன்ற சிறுதானியங்கள் கொண்டும் இதே போல செய்யலாம்.