அரிசியை களைந்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். புளியை 1/4 கப் வெந்நீரில் ஊறவைக்கவும்.
அரிசி ஊறியதும், தண்ணீரை வடித்துவிட்டு, 1/2 கப் தண்ணீர் சேர்த்து மை போல அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடானதும் கடுகு சேர்த்து, வெடித்ததும் உளுந்து, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து கலக்கவும்.
கப் தண்ணீர் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
புலி கரைசல் மேலும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து, தயாராக வைக்கவும்.
புளிக்கரைசல், அரைத்த மாவு சேர்த்து கலக்கவும். (தண்ணீர் கொதிப்பதற்கு முன் சேர்க்கவேண்டும்.
நன்கு கலந்து கிண்டிக்கொண்டே இருக்கவும்.
நிறம் மாறி கெட்டியானவுடன், மிதமான தீயில் வைக்கவும்.
மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும். 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து இறக்கவும். ஒட்டாமல் பதத்தில் இருக்கும்.