புதினா தொக்கு செய்முறை ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் மற்றும் விடியோவுடன். இது, துவையலை விட நீண்ட நாட்கள் வைத்து உபயோகிக்க முடியும். சாதத்துடன் கலந்தோ அல்லது தயிர் சாதத்துடன் ஊறுகாய் போலவோ உபயோகிக்கலாம்.
புதினா கட்டை வாங்கினால் பெரும்பாலும் சிறிது மட்டுமே உபயோகப்படும் என்பதால், பெரிய கட்டை வாங்க தயங்குவேன். இதற்காகவே சிறிது புதினா செடிகளை தொட்டியில் வளர்த்து, அவ்வப்பொழுது குருமா மற்றும் பிரியாணிக்கு பயன் படுத்திக்கொள்வேன்.
துவையல் அவ்வளவு பிடிக்காது என்பதால், இம்முறை தொக்கு செய்து பார்க்கலாம் என செய்தேன். இதில் நான் எப்பொழுதும் செய்யும் துவையலை விட அதிக புளி , உப்பு, மிளகாய் மற்றும் மேலும் சில பொருட்கள் சேர்த்து செய்வதால், வித்யாசமான சுவையுடன் இருந்தது. மேலும் இதில் தண்ணீர் சேர்க்காததால் நீண்ட நாட்கள் கெடாமலும் இருக்கும்.
இதனை நான் எப்பொழுதும் கோங்குரா பச்சடி செய்வது போல செய்துள்ளேன்.
புதினா தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:
புதினா – 2 கப், (கப்பில் அழுத்தி அளக்கவும்)
புளி – 1 மேஜைக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 20
பூண்டு -15 பற்கள்
தனியா – 1 தேக்கரண்டி
எள் – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/8 தேக்கரண்டி
செய்முறை:
- முதலில் கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, வெந்தயம், சிவப்பு மிளகாய், தனியா, எள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.30 நொடிகள் வறுக்கவும். சீரகம் சேர்த்து, மேலும் 30 நொடிகள் வதக்கவும்.
- பொன்னிறமானவுடன் தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
- பூண்டு பற்கள், புலி சேர்த்து, பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- தட்டில் கொட்டிவிட்டு, சுத்தம் செய்த புதினாவை சேர்க்கவும். (தண்ணீர் இல்லாமல் ஒரு சுத்தமான துணியில் ஒற்றி எடுத்துக்கொள்ளவும்)
- சற்று வதங்கி, சுருங்கினாள் போதும். தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
- ஆரிய பின், உப்பு, வெல்லம் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
- கடாயில் மீதமுள்ள எண்ணெய்யை சூடு செய்து, கடுகு மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து, அரைத்த புதினா கலவையை சேர்த்து, நன்கு ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.
குறிப்புக்கள்
- உப்பு, புளி மிளகாயை சரியாக உபயோகித்தால் தான் இதுபோன்ற தொக்குகள் நல்ல சுவையுடன் இருக்கும்.

- புதினா - 2 கப் (கப்பில் அழுத்தி அளக்கவும்)
- புளி - 1 மேஜைக்கரண்டி
- சிவப்பு மிளகாய் - 20
- பூண்டு -15 பற்கள்
- தனியா - 1 தேக்கரண்டி
- எள் - 1 தேக்கரண்டி
- வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- வெல்லம் - 1 தேக்கரண்டி
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- பெருங்காயம் - 1/8 தேக்கரண்டி
- முதலில் கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, வெந்தயம், சிவப்பு மிளகாய், தனியா, எள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.30 நொடிகள் வறுக்கவும். சீரகம் சேர்த்து, மேலும் 30 நொடிகள் வதக்கவும்.
- பொன்னிறமானவுடன் தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
- பூண்டு பற்கள், புலி சேர்த்து, பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- தட்டில் கொட்டிவிட்டு, சுத்தம் செய்த புதினாவை சேர்க்கவும். (தண்ணீர் இல்லாமல் ஒரு சுத்தமான துணியில் ஒற்றி எடுத்துக்கொள்ளவும்)
- சற்று வதங்கி, சுருங்கினாள் போதும். தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
- ஆரிய பின், உப்பு, வெல்லம் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
- கடாயில் மீதமுள்ள எண்ணெய்யை சூடு செய்து, கடுகு மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து, அரைத்த புதினா கலவையை சேர்த்து, நன்கு ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.
உப்பு, புளி மிளகாயை சரியாக உபயோகித்தால் தான் இதுபோன்ற தொக்குகள் நல்ல சுவையுடன் இருக்கும்.