பொறி உப்மா செய்முறை – இதனை காலை உணவாகவோ, மாலையில் சிற்றுண்டியாகவோ சாப்பிடலாம். எளிதில் செய்யக்கூடிய இந்த பொறி உப்மா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இந்த பொறி உப்மா செய்முறை ஒரு சில வருடங்களுக்கு முன்பு என் மாமி என்னிடம் பகிர்ந்துகொண்டார். அதை குறித்து வைத்ததோடு சரி, செய்து பார்க்கவே இல்லை. இந்த முறை கார்த்திகை மாதம் பொறி வாங்கும் பொழுது, இதனை எப்படியாவது செய்துபார்த்துவிடவேண்டும் என்று நினைத்திருந்தேன். பொறியை நன்கு அலசிவிட்டு செய்யவேண்டும் என்று மாமி சொன்னதும், உப்பு சப்பில்லாமல் நீர் கோர்த்துக்கொண்டிருக்கும் என்று நினைத்தே இவ்வளவு நாட்கள் செய்துபார்க்காமல் விட்டுவிட்டேன். ஆனால் நல்ல சுவையுடன் மற்ற உப்புமாவைப்போலவே தான் இருக்கிறது. நீங்களும் செய்து பாருங்கள்.
பொறி உப்புமா செய்ய தேவையான பொருட்கள்
பொறி – 3 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கேரட், பொடியாக நறுக்கியது – 3 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
மஞ்சள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
வேர்க்கடலை – 2 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
பொறி உப்புமா செய்முறை :
- முதலில் கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு போட்டு வெடித்ததும், உளுந்து, கடலைப்பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும். வேர்க்கடலை அப்பொழுதுதான் உள்வரை வறுபடும்.
- பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், கருவேப்பிலை சேர்த்து, 1 நிமிடம் வதக்கவும்.
- இதனிடையே பொறியை அளந்து, நன்கு அலசவும். ஒரு வடிகட்டியில் தண்ணீரை முற்றிலுமாக வடியும்படி வைக்கவும்.
- மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும். தண்ணீர் இல்லாமல் வடிந்த பொறியை சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் வதக்கி, இறக்கவும். எலுமிச்சம் பழ சாறு சேர்த்து கலக்கவும்.
இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை. அப்படியே சாப்பிடலாம்.

- பொறி - 3
- வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 2
- கேரட் பொடியாக நறுக்கியது - 3 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
- மஞ்சள் - 1/4 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
- வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 ஸ்ப்ரிக்