
ஜவ்வரிசி பாயசம் (வறுத்து செய்யும் முறை)

ஜவ்வரிசி பாயாசத்திற்கு எப்பொழுதும் ஜவ்வரிசியை ஊறவைத்து செய்வது தான் வழக்கமாகக்கொண்டிருந்தேன். சில மாதங்களுக்கு முன்பு ஒரு தோழி எனக்கு இந்த செய்முறையை அனுப்பியிருந்தார். அதன் பின் தான் என் அம்மாவும் அதே போல வறுத்து தான் ஜவ்வரிசி பாயசம் செய்வார் என ஞாபகம் வந்தது. தமிழ் வருடப்பிறப்பிற்கு இதனை செய்து பார்த்தேன், நன்றாக வந்தது. நீங்களும் இம்முறையில் பாயசம் தயாரித்து பார்க்கலாமே!
ஜவ்வரிசி பாயசம் செய்ய தேவையான பொருட்கள் :
ஜவ்வரிசி – 1/4 கப்
சக்கரை – 1/2 கப்
பால் – 3/4 – 1 கப்
உப்பு – ஒரு சிட்டிகை
ஏலக்காய் – 1
நெய் – 1 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு – 6
ஜவ்வரிசி பாயசம் செய்முறை :
- ஒரு சிறிய குக்கரில் நெய் சேர்த்து, முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும். அதே நெய்யில் ஜவ்வரிசியை சேர்த்து, பொரியும் வரை நிதானமான தீயில் வறுக்கவும்.
- 1 & 1/4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து, 6 விசில்கள் வேக விடவும். தண்ணீர் சேர்க்கும் பொழுது, ஆவி கைகளில் அடிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
- குக்கர் திறந்த பிறகு இரண்டு நிமிடங்கள் கழித்து, சக்கரை சேர்த்து, கொதிக்க விடவும்.
- பால் சேர்த்து கலக்கி, மேலும் 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.
சூடாகவும் நன்றாக இருக்கும், ஜில்லென்று சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.

javvarisi payasam tamil
Prep Time
5 mins
Cook Time
25 mins
Total Time
30 mins
வறுத்து செய்யும் முறை. ஜவ்வரிசி பாயாசத்திற்கு எப்பொழுதும் ஜவ்வரிசியை ஊறவைத்து செய்வது தான் வழக்கமாகக்கொண்டிருந்தேன்.
Course: Dessert
Cuisine: Indian
Servings: 2
Ingredients
- ஜவ்வரிசி - 1/4 கப்
- சக்கரை - 1/2 கப்
- பால் - 3/4 - 1 கப்
- உப்பு - ஒரு சிட்டிகை
- ஏலக்காய் - 1
- நெய் - 1 தேக்கரண்டி
- முந்திரிப்பருப்பு - 6
Instructions
- ஒரு சிறிய குக்கரில் நெய் சேர்த்து, முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.
- அதே நெய்யில் ஜவ்வரிசியை சேர்த்து, பொரியும் வரை நிதானமான தீயில் வறுக்கவும்.
- & 1/4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து, 6 விசில்கள் வேக விடவும். தண்ணீர் சேர்க்கும் பொழுது, ஆவி கைகளில் அடிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
- குக்கர் திறந்த பிறகு இரண்டு நிமிடங்கள் கழித்து, சக்கரை சேர்த்து, கொதிக்க விடவும்.
- பால் சேர்த்து கலக்கி, மேலும் 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.
Excellent