வாழைக்காய் பொடிமாஸ், vazhakkai podimas in tamil

வாழைக்காய் பொடிமாஸ்

வாழைக்காய் பொடிமாஸ்
வாழைக்காய் பொடிமாஸ் , உருளைக்கிழங்கு பொடிமாஸ் போலவே செய்யலாம். செய்முறை சற்று வித்தியாசமானது. வாழைக்காயை துருவி பொடிமாஸ் செய்ந்துள்ளேன். என் மாமி, உதிர்த்து செய்வார்கள். வாழைக்காய் பொடிமாஸ், உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் செய்முறையை மாற்றிக்கொள்ளலாம். வாழைக்காய் பொடிமாஸ் சின்ன வெங்காயம் சேர்த்து செய்தால் மிகவும் மனமாக இருக்கும். இறுதியில் சில பேர் எலுமிச்சை சாறு சேர்ப்பதும் வழக்கம்.

vazhakkai podimas in tamil
Prep Time
5 mins
Cook Time
20 mins
Total Time
25 mins
 
Vazhakkai podimas made by grating raw banana, frying with onion and green chillies along with tempering with a coconut garnish
Course: Side Dish
Cuisine: Indian
Author: rakskitchentamil
Ingredients
 • <b>என்ன தேவை?</b>
 • வாழைக்காய் - 1
 • வெங்காயம் - 1
 • பச்சை மிளகாய் - 3
 • தேங்காய் துருவல் - 1/4 கப்
 • மஞ்சள் தூள் தேவைப்பட்டால் - 1/4 தேக்கரண்டி
 • உப்பு - தேவையான அளவு
 • <b>தாளிக்க </b>
 • எண்ணெய் - 2 தேக்கரண்டி
 • கடுகு - 1/2 தேக்கரண்டி
 • உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
 • கருவேப்பிலை - 1 ஆர்க்கு
Instructions
 1. வாழைக்காயை இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக வெட்டவும். சிறிது தண்ணீர் சேர்த்து, இரண்டு அல்லது மூன்று விசில்கள் வரை குக்கரில் வேக வைக்கவும்.
 2. ஆரிய பிறகு, தோலை உரித்து, வாழைக்காயை துருவிக்கொள்ளவும்.
 3. கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், கடுகு பொரித்து, உளுத்தம்பருப்பை சேர்க்கவும். கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
 4. வெங்காயம் நிறம் மாறாமல் வதக்கவும். பிறகு, மஞ்சள் தூள் சேர்ப்பதானால் சேர்த்து, உப்பு மற்றும் துருவிய வாழைக்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
 5. துருவிய தேங்காய் சேர்த்து, ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.
Recipe Notes

<b>உங்கள் கவனத்திற்கு </b>
வாழைக்காயை முக்கால் பதம் வேகவைத்தால் போதுமானது.
சின்ன வெங்காயம் சேர்த்தால் மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்தும் இறக்கலாம்.

வாழைக்காய் பொடிமாஸ் எப்படி செய்வது?

 1. வாழைக்காயை இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக வெட்டவும். சிறிது தண்ணீர் சேர்த்து, இரண்டு அல்லது மூன்று விசில்கள் வரை குக்கரில் வேக வைக்கவும்.
 2. ஆரிய பிறகு, தோலை உரித்து, வாழைக்காயை துருவிக்கொள்ளவும்.
 3. கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், கடுகு பொரித்து, உளுத்தம்பருப்பை சேர்க்கவும். கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
 4. வெங்காயம் நிறம் மாறாமல் வதக்கவும். பிறகு, மஞ்சள் தூள் சேர்ப்பதானால் சேர்த்து, உப்பு மற்றும் துருவிய வாழைக்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
 5. துருவிய தேங்காய் சேர்த்து, ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.

புளிப்பான அல்லது காரசாரமான குழம்புகளுக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

வாழைக்காய் பொடிமாஸ்

Author: Raks Anand

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe Rating