ஸ்வீட் காரன் சுண்டல், Sweet corn sundal

ஸ்வீட் காரன் சுண்டல்

தேவையான பொருட்கள்
ஸ்வீட் காரன் – 1
பொடியாக நறுக்கிய காரட்  – 2 மேஜைக்கரண்டி
துருவிய தேங்காய் – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

தாளிக்க
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 3/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் – 1
கருவேப்பிலை – 1 கொத்து
பெருங்காயம் – 2 சிட்டிகை

செய்முறை

  1. ஸ்வீட் கார்னை உரித்து, உப்பு சேர்த்து, குக்கரிலோ, மைக்ரோவேவ் அவனிலோ வேகவைத்துக்கொள்ளவும்.ஒரு கடாயில், என்னை ஊற்றி தாளித்து,   காரட்டை சேர்த்து வதக்கவும்.sc1
  2. பிறகு வேகவைத்த சோளத்தை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். தண்ணீர் சுண்டியவுடன் துருவிய தேங்காய் சேர்த்து இறக்கவும்.sc1

குறிப்பு

** சோளத்தை குக்கரில் சிறிது தண்ணீர் சேர்த்து 3 விசில் வரை வேக வைக்கவும். மைக்ரோவேவ் அவன் என்றல், மிகவம் சிறிது தண்ணீர் சேர்த்து 4-5 நிமிடங்கள் மூடி வேக வைத்தால் போதுமானது.

Author: Raks Anand

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *