ரவா லட்டு, ரவா உருண்டை, பொதுவாக எல்லோர் வீட்டிலும் செய்யும் வழக்கமான இனிப்பு. வீட்டில் இருக்கும் ரவை மற்றும் சக்கரை வைத்து, நெய் சேர்த்து எளிதில் செய்யக்கூடிய இனிப்பு என்பதால் இது எப்பொழுதுமே சூப்பர் ஹிட். தீபாவளிக்கு கண்டிப்பாக என் வீட்டில் இது செய்துவிடுவோம். இப்பொழுதும் அம்மா நான் என் வீட்டிற்கு செல்லும் பொழுதெல்லாம் இதனை செய்து என்னிடம் கொடுத்துவிடுவார். எனக்காக இல்லை, என் புகுந்த வீட்டில் எல்லோர்க்கும் இது மிகவும் பிடிக்கும் என்பதால். எனக்கு பிடித்த பலகாரங்களே வேறு. கடையில் வாங்கும் தேனொழுகும் ஜாங்கிரி மற்றும் லோக்கல் பேக்கரி சாக்ஸ். அது எனக்கு கிடைத்துவிடும். இந்த ரவா லட்டு/ ரவா உருண்டை எப்படி செய்வது என்று பார்ப்போம். இதனை சீனி உருண்டை என்றும் கூறுவோம்.
தேவையான பொருட்கள்
ரவை – 1 கப்
சக்கரை – 1 கப்
நெய் – 1/4 கப்
ஏலக்காய் – 1
முந்திரி – 8
ரவா உருண்டை செய்முறை:
- ஒரு அடி கனமான கடாயில், ரவையை நிறம் மாறாமல், மிதமான தீயில் வறுக்கவும். ஆறவைத்து மிக்சியில் நைசாக பொடிக்கவும். சல்லடையில் சலித்துவிடவும்.
- சக்கரையையும் ஏலக்காய் சேர்த்து நன்கு நைசாகப் பொடிக்கவும். இரண்டையும் ஒரு கிண்ணத்தில் கொட்டி வைக்கவும்.
- நெய் சூடு செய்து அதில் உடைத்த முந்திரிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ரவா, சக்கரை கலவையில் சேர்த்து, கரண்டியில் கலக்கவும்.
- கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன், நன்கு கலந்து, உருண்டைகளாக அழுத்திப் பிடிக்கவும். உருண்டை பிடிக்க வரவில்லை என்றால், கூடுதலாக ஓரிரு தேக்கரண்டி சூடான நெய் சேர்த்து பிடிக்கலாம்.
குறிப்புகள்
- மிக்சி சூடாகாமல் நிறுத்தி நிறுத்தி அரைக்கவும்.

ரவா உருண்டை செய்வது எப்படி, rava urundai
Prep Time
25 mins
Cook Time
5 mins
Total Time
30 mins
ரவா லட்டு, ரவா உருண்டை, பொதுவாக எல்லோர் வீட்டிலும் செய்யும் வழக்கமான இனிப்பு. ரவை மற்றும் சக்கரை வைத்து, நெய் சேர்த்து எளிதில் செய்யக்கூடிய இனிப்பு.
Course: Sweets
Cuisine: Indian
Servings: 20
Ingredients
- ரவை - 1 கப்
- சக்கரை - 1 கப்
- நெய் - 1/4 கப்
- ஏலக்காய் - 1
- முந்திரி - 8
Instructions
- ஒரு அடி கனமான கடாயில், ரவையை நிறம் மாறாமல், மிதமான தீயில் வறுக்கவும். ஆறவைத்து மிக்சியில் நைசாக பொடிக்கவும். சல்லடையில் சலித்துவிடவும்.
- சக்கரையையும் ஏலக்காய் சேர்த்து நன்கு நைசாகப் பொடிக்கவும். இரண்டையும் ஒரு கிண்ணத்தில் கொட்டி வைக்கவும்.
- நெய் சூடு செய்து அதில் உடைத்த முந்திரிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ரவா, சக்கரை கலவையில் சேர்த்து, கரண்டியில் கலக்கவும்.
- கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன், நன்கு கலந்து, உருண்டைகளாக அழுத்திப் பிடிக்கவும். உருண்டை பிடிக்க வரவில்லை என்றால், கூடுதலாக ஓரிரு தேக்கரண்டி சூடான நெய் சேர்த்து பிடிக்கலாம்
Recipe Notes
மிக்சி சூடாகாமல் நிறுத்தி நிறுத்தி அரைக்கவும்.