நெய் அப்பம், பண்டிகை நாட்களில் செய்யும் பலகாரம். நெய்யிலேயே செய்வதால் மிகவும் ருசியாகவும், எளிதில் கெடாமலும் இருக்கும். கடவுளுக்கு படைப்பதற்கு உகந்தது.
நெய் அப்பம்- என்ன தேவை?
பச்சரிசி – 1 கப்
வெல்லம் – 3/4 கப்
தேங்காய் துருவல் – 4 மேஜைக்கரண்டி
ஏலக்காய் – 1
சமையல் சோடா – 3 சிட்டிகை
உப்பு – 1/8 தேக்கரண்டி
நெய் – தேவைக்கேற்ப
எப்படி செய்வது?
- அரிசியை கழுவி, 3 மணிநேரம் குறைந்தது ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து, கெட்டியாக அரைக்கவும்.
- வெல்லத்தை மிகவும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து உருக்கவும். வடிகட்டி, அரைத்த மாவில் சேர்க்கவும்.
- தேங்காய் துருவல், பொடித்த ஏலக்காய், சமையல் சோடா, உப்பு சேர்த்து கலக்கவும். பணியார சட்டியை சூடு செய்து, 1/2 தேக்கரண்டி நெய், ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும். அதில் 3/4 பங்கு மாவை ஊற்றவும்.
- மிதமான தீயில், மூடி வேக விடவும். சிவந்ததும் பணியாரங்களை திருப்பவும்.
- இரு புறமும் சிவந்ததும், எடுத்து, சூடாக பரிமாறவும்.

நெய் அப்பம், Nei appam recipe in tamil
Prep Time
3 hrs
Cook Time
20 mins
Total Time
3 hrs 20 mins
நெய் அப்பம், பண்டிகை நாட்களில் செய்யும் பலகாரம். நெய்யிலேயே செய்வதால் மிகவும் ருசியாகவும், எளிதில் கெடாமலும் இருக்கும். கடவுளுக்கு படைப்பதற்கு உகந்தது.
Course: snacks
Cuisine: Indian
Servings: 15
Ingredients
- பச்சரிசி - 1 கப்
- வெல்லம் - 3/4 கப்
- தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
- ஏலக்காய் - 1
- சமையல் சோடா - 3 சிட்டிகை
- உப்பு - 1/8 தேக்கரண்டி
- நெய் - தேவைக்கேற்ப
- வாழைப்பழம் - 1/2 தேவைப்பட்டால்
Instructions