மோதகம், Mothagam recipe in tamil

மோதகம்
12 செய்யஎன்ன தேவை?
மேல் மாவு :அரிசி மாவு / இடியப்ப மாவு – 1/2 கப்
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு, தண்ணீர் – தேவையான அளவுதேங்காய் பூரணம் :

துருவிய தேங்காய் – 1 கப்
வெல்லம் – 1 கப்பிலிருந்து 3 மேஜைக்கரண்டி எடுத்து விடவும்
ஏலக்காய் – 2

எப்படி செய்வது?

 1. போதுமான தண்ணீரை, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். மாவில், உப்பு சேர்த்து, கொதிக்கும் தண்ணீரை ஊற்றி பிசையவும். ஒரு தோசைத்திருப்பியின் காம்பு கொண்டு கிளறலாம். அல்லது ஒரு கரண்டி கொண்டும் கிளறலாம்.
 2. சிறிது காய் பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன், நன்கு பிசைந்து,  12 சமமான அளவு உருண்டைகளாக உருட்டி, மூடிவைக்கவும்.
 3. வெல்ல பூரணத்திற்கு, தேங்காய், மற்றும் வெல்லத்தை ஒன்றாக மிதமான தீயில் வைத்து கிளறவும்.
 4. வெல்லம் இளகி, நன்கு தேங்காயுடன் கலந்து மறுபடியும் இறுகும் வரை கிளறி, ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து இறக்கவும்.
 5. ஆறியபின் சம அளவு உருண்டைகளாக உருட்டவும்.
 6. கைகளில் சிறு துளி எண்ணெய் தடவி, உருட்டிய மாவு உருண்டையை,  மெல்லிய தடிமன் உள்ள கிண்ணமாக செய்யவும்.
 7. உள்ளே பூரண உருண்டையை வைத்து, மூடி, அழகாக மோதகம் வடிவில் ஷேப் செய்யவும்.
 8. இட்லி தட்டில் எண்ணெய் தடவி, செய்த மோதகங்களை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
உங்கள் கவனத்திற்கு
 • தண்ணீரை நன்கு கொதிக்க விட வேண்டும், இல்லையெனில், மாவு வேகாமல் கிண்ணம் செய்ய வராது, வின்டு  போய் விடும் .
 • கொழுக்கட்டை செய்ய , அரிசி மாவு மிகவும் நைசாக இருக்க வேண்டும். 
 • கொழுக்கட்டை வெந்துவிட்டதை, பளபளப்பான  மேல் மாவை கொண்டு அறியலாம்.   

One comment

 1. அம்மணி,
  வணக்கம்.நான் கடந்த 30 நிமிடம் முன்பு வரை Rakskitchen ஆங்கிலம் தான் படித்திருந்தேன்.பல ஆண்டுகளாக நான் தங்களின் வாசகன். எங்கள் குழந்தைகள் கூட தங்களின் பல recipe செய்திருக்கிறார்கள்!
  இன்று தான் முதன் முதலாகத் தமிழில் மோதகம் செய்வதைப் பற்றிப் படித்தேன்.
  நிச்சயம் இம்முறை September 5 2.016, Vinayagar Chathurthi க்கு
  மோதகம் செய்வேன். நன்றி.
  எனக்கு உங்கள் recipes தமிழில் அனுப்பவும்.
  மிக்க நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *