
கேரட் ஹல்வா
என்ன தேவை?
துருவிய கேரட் – 3 கப்
சக்கரை – 3/4 கப் – 1 கப்
நெய் – 1/4 கப்
பால் – 2 & 1/4 கப் (Can reduce for quick version)
ஏலக்காய் – 1, பொடித்தது
முந்திரி பருப்பு – 5
பிஸ்தா – 5
உப்பு – ஒரு சிட்டிகை
எப்படி செய்வது?
- காரட்டை துருவி கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில், 1 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து, துருவிய கேரட்டை சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கி, பச்சை வாசனை நீங்கியவுடன், பால் சேர்த்து வேக விடவும். நடுவில் கிளறிவிடவும். இல்லாவிடில் அடி பிடித்து விடும்.
- தீயை மிதமாக வைக்கவும். பால் பாதி சுண்டியவுடன் தீயை அதிகமாக்கி , கை விடாமல் கிளறினால், பால் விரைவாக சுண்டும். அகலமான வாய் இருக்கும் பாத்திரமாக தேர்ந்தெடுக்கவும்.
- பால் சுண்டி, கேரட் வெந்ததும், சக்கரை சேர்த்து கிளறவும்.
- நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். கெட்டியாகும் பொழுது, பொடித்த ஏலக்காய் சேர்த்து கிளறவும்.
- ஹல்வா பதம் – ஓரங்களில் ஒட்டாமல் திரண்டு வரும் பொழுது அடுப்பை நிறுத்தி, ஒரு மேஜைக்கரண்டி நெய்யில் முந்திரி பிஸ்தாவை பொன்னிறமாக வறுத்து சேர்க்கவும்.
- ஹல்வா வேகும் பொழுது மேலே தேரிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
- நெய் மற்றும் பால், உங்கள் விருப்பத்திற்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்