உளுந்து களி அல்லது உளுந்தங்களி, உடலுக்கு சத்து சேர்க்கவும், இடுப்புக்கு பலம் சேர்க்கவும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற ஒன்று. உளுந்தங்களி எப்படி செய்வது என்று இந்த போஸ்டில் பார்ப்போம்.
Course: Snack
Cuisine: Indian
Keyword: உளுந்தங்களி, உளுந்து களி, களி
Servings: 4
Author: Raks Anand
- 1/2 கப் உளுந்து
- 1 மேஜைக்கரண்டி அரிசி
- 1/2 கப் + 1 மேஜைக்கரண்டி வெல்லம் அல்லது கருப்பட்டி பொடித்து
- 3 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய்
உளுந்தையும் அரிசியையும் தனித்தனியாக ஒரு வாணலியில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
ஆறியபின் மிக்சியில் நைசாக மாவாக அரைக்கவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில், வெள்ளம்/ கருப்பட்டி சேர்த்து, அரை கப் + 2 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
அரைத்த மாவை அதில் சேர்த்து அடுப்பை அணைக்கவும். ஒரு விஸ்க் கொண்டு உடனே கட்டி இல்லாமல் கலக்கவும்.
மேலும் 1/4 கப்+ 2 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து கலக்கவும். மீண்டும் அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வேக வைக்கவும்.
கை விடாமல் கலந்துகொண்டு இருப்பது அவசியம். இல்லையென்றால் அடி பிடிக்கும்.
கிண்டும் பொழுது, ஒரு சமயத்தில் 1 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும்.
களி வெந்து, ஓரத்தில் ஒட்டாமல் வந்தவுடன், கையை தண்ணீரில் நினைத்து, களியை தொட்டுப்பார்த்தால் ஒட்டக்கூடாது. இப்பொழுது அடுப்பை அணைக்கவும்.
உளுந்தும், அரிசியும் வருக்கும் பொழுது, மிதமான தீயில் வறுத்தால் தான், கருகாமல், உள் வரை வறுபடும் .
எண்ணெய், ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை சேர்த்துக்கொள்ளவும்.