Go Back
godhumai rava pongal, கோதுமை ரவா பொங்கல்
Prep Time
2 mins
Cook Time
20 mins
Total Time
22 mins
 
கோதுமை ரவா பொங்கல், மிகவும் சத்தான, சுவையான காலை உணவு. வெள்ளை ரவாவை விட கோதுமை ரவா சற்று சத்து கூடுதலானது. மிகவும் எளிதில் செய்யக்கூடியது.
Course: Breakfast
Cuisine: Indian
Servings: 4 cups
Author: Rakskitchentamil
Ingredients
  • கோதுமை ரவை - 1 கப்
  • பயத்தம் பருப்பு பாசி பருப்பு - 3 மேஜைக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப
  • நெய் - மேலே ஊற்றி பரிமாற
  • தாளிக்க
  • நெய் - 1 மேஜைக்கரண்டி
  • மிளகு - 1 & 1/2 தேக்கரண்டி
  • ஜீரகம் - 1 தேக்கரண்டி
  • இஞ்சி மிகவும் பொடியாக நறுக்கியது - 1 மேஜைக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 2
  • கருவேப்பிலை - 1 ஆர்க்கு
  • பெருங்காயம் - 1/8 தேக்கரண்டி
  • முந்திரிப்பருப்பு - 8
Instructions
  1. ஒரு சிறிய குக்கரை சூடு செய்து, நெய் ஊற்றி, மிளகு போட்டு, வெடித்ததும் தீயைக் குறைத்து, சீரகம், இஞ்சி, கருவேப்பிலை, பச்சை மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து, 1/2 நிமிடம் வதக்கவும். முந்திரி சேர்ப்பதானால் மிளகு சேர்த்த பிறகு சேர்க்கவும்.
  2. பயத்தம் பருப்பை சேர்த்து, லேசாக வறுக்கவும்.
  3. இதில் கோதுமை ரவையை சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து, 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  4. மிதமான தீயில், 4 விசில்கள் வைக்கவும்.
Recipe Notes

முந்திரி என் வீட்டில் யாருக்கும் பிடிக்காது அதனால், நான் இங்கே சேர்க்கவில்லை.
தண்ணீர் 3& 1/2 - 4 கப் வரை சேர்க்கலாம். தளர வேண்டும் என்றால் 4 கப்.
மஞ்சள் தூள் சேர்த்தும் இந்த பொங்கலை செய்யலாம்.