Go Back
கருவேப்பிலை பொடி செய்முறை
Prep Time
20 mins
Cook Time
10 mins
Total Time
30 mins
 

கருவேப்பிலை பொடி வயிற்றுக்கும் உடம்பிற்கும் மிகவும் நல்ல ஒரு பொடி. இதனை, சாதத்தோடு நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிட வேண்டும்.

Course: Condiments
Cuisine: Indian
Servings: 1 cup
Author: Raks Anand
Ingredients
  • 1 கப் கருவேப்பிலை நன்கு அடைத்து அளக்கவும்
  • 1/2 கப் உளுத்தம் பருப்பு
  • 8-10 சிகப்பு மிளகாய்
  • 3 மேஜைக்கரண்டி துருவிய தேங்காய்
  • 1/4 தேக்கரண்டி பெருங்காயம்
  • உப்பு தேவைக்கேற்ப
  • 2 தேக்கரண்டி எண்ணெய்
Instructions
  1. ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி, முதலில் பெருங்காயம், மிளகாய், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக, மிதமான தீயில் வறுக்கவும்.
  2. துருவிய தேங்காய் கடைசியாக சேர்த்து, பொன்னிறமாக வறுக்கவும்.
  3. அடுப்பை நிறுத்திவிட்டு, அந்த வாணலியில் சூட்டிலேயே கருவேப்பிலையை சேர்த்து, இரண்டு முறை வதக்கி, அப்படியே ஆறவிடவும்.
  4. கருவேப்பிலை காய்ந்து, லேசாகவும் மொறுமொறுப்பாகவும் மாறிவிடும்.
  5. மைக்ரோ வேவ் ஓவென் இருந்தால் அதில் மூன்று நிமிடம் வைத்து அப்படியே ஒரு 2 நிமிடம் விட்டாலும் மொறு மொறு என்று ஆகி விடும். ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை கிளறிவிட வேண்டும்.
  6. ஆரிய பின், உளுத்தம் பருப்பு தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து பொடி செய்யவும்.
  7. கடைசியாக, உளுந்து சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும்.

Recipe Video

Recipe Notes

கருவேப்பிலையை நன்கு கழுவி, சுத்தம் செயது, ஒரு சுத்தமான துணியில் பரப்பி, நிழலிலேயே தண்ணீர் இல்லாமல் உலர்த்தவும். பிறகு தான் இந்த பொடியை செய்ய வேண்டும்.