* வெங்காயம் சேர்க்காமலும் இந்த வடையை செய்யலாம்.
பருப்பு வடை எப்படி செய்வது?
இரண்டு பருப்பையும் கழுவி, 3 மணிநேரம் குறைந்தது ஊற வைக்கவும்.
தண்ணீரை வடித்து, முதலில் மிக்சியில் உப்பு, மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
பிறகு பருப்பை சேர்த்து, ஓரிரு தடம் மிக்சியை சுற்றவிடவும். ஓரங்களை வழித்துவிட்டு, நிறுத்தி நிறுத்தி 3-4 முறை அரைக்கவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம்)
கரகரப்பாக அரைத்த பருப்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், காரட், பெருங்காயம், உப்பு, கிரகம், கருவேப்பில்லை அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.
கைகளை தண்ணீரில் ஒவ்வொரு முறையும் நனைத்து, சிறி உருண்டைகளாக உருட்டி , லேசாக தட்டவும்.
தட்டிய வடையை, சூடான எண்ணெய்யில் கவனமாக போவும். பொரித்து எடுக்கவும்.
இரு புறமும் பொன்னிறமாக வெந்தவுடன் கிட்சன் டிஷுயூவில் எடுத்து வைக்கவும்.