வெந்தய கீரை கூட்டு, மிகவும் சத்தான, சுவையான கூட்டு. சூடான சாதத்தில், கூட்டை ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். பயற்றம் பருப்பும் தெகையும் சேர்ப்பதால் கசப்பு அறவே இருக்காது.
Course: Side Dish
Cuisine: Indian
Servings: 3
Author: rakskitchentamil
- வெந்தய கீரை - 2 கப் கப்பில் அழுத்தி அளக்கவும்
- பயற்றம் பாசி பருப்பு - 3 மேஜைக்கரண்டி
- தேங்காய் - 1/2 கப்
- சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
- சக்கரை - 1/4 தேக்கரண்டி
- அரிசி மாவு - 1/4 தேக்கரண்டி
- தாளிக்க
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- ஜீரகம் - 1 தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 4
பாசி பருப்பை (பயற்றம் பருப்பு) 1/2 கப் தண்ணீர் சேர்த்து, 2 விசில் மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.
வெந்தய கீரையை ஆய்ந்து, கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். சிறிது தண்ணீரை கொதிக்கவைத்து, அதில் வெந்தய கீரை, சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து வேக வைக்கவும்.
தேங்காயை அரிசி மாவு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
வெந்த கீரையில் பருப்ப்பை சேர்க்கவும்.
அரைத்த தேங்காயையும் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு கோதி வந்தவுடன் அடுப்பை அனைக்கவும்.
வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடு செய்யவும். தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்து, நைசாக அறிந்த வெங்காயத்தை சேர்க்கவும்.
பொன்னிறமானவுடன் கூட்டில் சேர்த்து கலக்கவும்.