கோதுமை மாவை வைத்து ஹல்வா செய்வது மிகவும் எளிதானது. வீட்டில் எதிர்பாராத விருந்தாளிகள் வந்தாலோ, உங்களுக்கு இனிப்பு சாப்பிடும் ஆசை வந்தாலோ, சில நிமிடங்களில் செய்து அசத்தக்கூடிய ஒரு ஹல்வா.
Course: Dessert
Cuisine: Indian
Author: rakskitchentamil
- கோதுமை மாவு - 1/2 கப்
- சர்க்கரை - 1/2 கப்
- தண்ணீர் - 1/2 கப்
- நெய் - 1/4 கப் + தேவைக்கேற்ப
- ஏலக்காய் - 1
- முந்திரி - 5
- பாதாம் - 5
- உப்பு - 1 சிட்டிகை
ஒரு கடாயில் நெய் சூடு செய்து, உடைத்த முந்திரி, பாதாம் சேர்த்து, பொன்னிறமாக வறுக்கவும்.
கோதுமை மாவு சேர்த்து சிறு தீயில் கிளறவும். சிறிது சிவந்து, வாசனை வந்தவுடன், தண்ணீர் உப்புடன் சேர்த்து கிளறவும்.
தண்ணீர் ஊற்றி கிளரும்பொழுதே விரைவாக வெந்துவிடும். வெந்தவுடன், சர்க்கரை சேர்த்து கிளறவும்.
குறைந்த தீயில் 2 அல்லது மூன்று நிமிடங்கள் கிளறினால், நெய் பிரிந்து, பளபளப்பாக திரண்டு வரும் பொழுது, அடுப்பை அணைக்கவும்.
உப்பு சேர்த்தல், திகட்டாமல் இருப்பதற்காக.