வேர்க்கடலை சுண்டல் செய்முறை. ஒவ்வொரு குறிப்பிற்கும் படங்களுடன். எளிதில் செய்யக்கூடிய சுண்டல் வகைகளுள் ஒன்று. இரவே ஊறவைக்கும் வேலை இல்லை.
Course: snacks
Cuisine: Indian
Servings: 3
Author: Rakskitchen Tamil
- தேவையான பொருட்கள்
- வேர்கடலை காய்ந்தது - 1 கப்
- துருவிய தேங்காய் - 1/4 கப்
- உப்பு - தேவையான அளவு
- தாளிக்க
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
- கடுகு - 3/4 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- சிகப்பு மிளகாய் - 2
- பெருங்காயம் - 2 சிட்டிகை
- கருவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை
வேர்கடலையை ஓரிரு மணி நேரங்கள் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து, 3/4 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 3 விசில் வரும் வரை குக்கரில் வேகவிடவும்.
ஒரு கடையில் எண்ணெய் சேர்த்து, தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்து, வேகவைத்த வேர்கடலையை, தண்ணீரை வடித்து சேர்க்கவும்.
ஒரு நிமிடம் வதக்கி, துருவிய தேங்காய் சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும்.