Go Back
காலிஃபிளவர் மிளகு மசாலா கறி
Prep Time
15 mins
Cook Time
20 mins
Total Time
35 mins
 
காலிஃபிளவர் மிளகு மசாலா கறி செய்முறை - மிளகு, ஜீரகம், தனியா, மிளகாய் போன்ற பொருட்களை மசாலாவாக சேர்த்து செய்யும் சுவையான கறி
Course: Side Dish
Cuisine: Indian
Servings: 3
Author: raksanand
Ingredients
  • காலிஃபிளவர் - 1 நடுத்தர அளவு
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 2
  • மஞ்சள் - 1/4 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
  • அரைத்துக் கொள்ளவும்
  • சிவப்பு மிளகாய் - 3
  • கருப்பு மிளகு - 3/4 தேக்கரண்டி
  • வற கொத்தமல்லி தனியா - 1 தேக்கரண்டி
  • பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
  • பூண்டு - 2 பல்
  • தாளிக்க
  • எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • இலவங்கப்பட்டை - 1/2 அங்குல துண்டு
  • கிராம்பு - 2
  • பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
  • கருவேப்பிலை - 1 ஆர்க்கு
Instructions
  1. காலிஃபிளவரை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி (2 கப்). உப்பு மற்றும் 1/8 தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து, கொத்தி நீரில் மூழ்க்கி வைக்கவும்.
  2. முதலில் தண்ணீரில்லாமல் மசாலா பொருட்களை மிக்சியில் அரைத்து, பிறகு மீண்டும் அதனுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து, கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு கனமான பான் / கடாயை சூடாக்கி, எண்ணெய் சேர்த்து, தாலிக்கவேண்டிய பொருட்களை வரிசைப்படி சேர்க்கவும். மெல்லிதாக வெட்டிய வெங்காயம் சேர்க்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்க்கவும். தேவையான உப்பு, மீதமுள்ள மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். நன்கு ஒன்று சேர்ந்தாற்போல வரவேண்டும்.
  5. காலிஃபிளவர் தண்ணீரில் இருந்து வடிகட்டி அதில் சேர்க்கவும். அரைத்த மசாலாவையும் சேர்க்கவும்.
  6. நிமிடங்கள் அல்லது தண்ணீர் சுண்டும் வரை வேக விடவும். காலிஃபிளவர் வேக நேரமாகுமானால், மூடி வேக வைக்கலாம்.
  7. எண்ணெய் பிரிய ஆரம்பித்து, கறி பளபளப்பாகும் வரை வதக்கவும். மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து, காலிஃபிளவர் வதங்கி லேசாக சுருங்கும். அப்பொழுது அடுப்பை அனைத்து விடவும்.
Recipe Notes

மசாலா அரைக்க மிக்சி இல்லாவிடில், தனியா தூள், மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து, பூண்டை நசுக்கி உபயோகிக்கலாம்.