முதல் 15 நிமிடங்கள் வரைபாசுமதி அரிசியை ஊறவைத்து, பிறகு, தண்ணீரை ஓட்ட வடித்துவிட்டு, 1/4 தேக்கரண்டி நெய் சேர்த்து ஒரு கடாயில் வறுக்கவும்.
ஒரு அடி கனமான பாத்திட்டத்திலோ, குக்கரிலோ, நெய்/ எண்ணெய் சேர்க்கவும்.
ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, இலவங்கப்பட்டை, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை வரிசையாக சேர்க்கவும்.
வெங்காயம் வதங்கியதும், வெட்டிய காய்கறிகள் சேர்த்து, அதற்க்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
கொத்தமல்லி இலை, புதினா மற்றும் பொடிகள் (சிவப்பு மிளகாய், கரம் மசாலா, மஞ்சள்) ஆகியவற்றைத் சேர்த்து, ஒரு கிளறு கிளறவும்.
தண்ணீர், தேங்காய் பால், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
நான் தேங்காய் பால் பவுடர் பயன்படுத்தினேன், நீங்கள் கூட கடைகளில் தயாரிக்கப்படும் தேங்காய்ப் பால் பயன்படுத்தலாம்.
பாஸ்மதி அரிசி சேர்த்து, கொதிக்கும் பொழுது, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, 12- 14 நிமிடங்கள் வரை, குறைந்த தீயில் வேக வைக்கவும். மிதமான தீயில் 2 விசில்களும் வைக்கலாம்.