முதலில் கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, வெந்தயம், சிவப்பு மிளகாய், தனியா, எள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.30 நொடிகள் வறுக்கவும். சீரகம் சேர்த்து, மேலும் 30 நொடிகள் வதக்கவும்.
பொன்னிறமானவுடன் தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
பூண்டு பற்கள், புலி சேர்த்து, பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
தட்டில் கொட்டிவிட்டு, சுத்தம் செய்த புதினாவை சேர்க்கவும். (தண்ணீர் இல்லாமல் ஒரு சுத்தமான துணியில் ஒற்றி எடுத்துக்கொள்ளவும்)
சற்று வதங்கி, சுருங்கினாள் போதும். தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
ஆரிய பின், உப்பு, வெல்லம் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
கடாயில் மீதமுள்ள எண்ணெய்யை சூடு செய்து, கடுகு மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து, அரைத்த புதினா கலவையை சேர்த்து, நன்கு ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.