Go Back
பொறி உப்மா செய்முறை
Prep Time
5 mins
Cook Time
10 mins
Total Time
15 mins
 
பொறி உப்மா செய்முறை - இதனை காலை உணவாகவோ, மாலையில் சிற்றுண்டியாகவோ சாப்பிடலாம். எளிதில் செய்யக்கூடிய இந்த பொறி உப்மா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
Course: Breakfast
Cuisine: Indian
Servings: 2
Author: rakskitchentamil
Ingredients
  • பொறி - 3
  • வெங்காயம் - 1
  • பச்சை மிளகாய் - 2
  • கேரட் பொடியாக நறுக்கியது - 3 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
  • மஞ்சள் - 1/4 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
  • கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
  • வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 ஸ்ப்ரிக்
Instructions
  1. முதலில் கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு போட்டு வெடித்ததும், உளுந்து, கடலைப்பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும். வேர்க்கடலை அப்பொழுதுதான் உள்வரை வறுபடும்.
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், கருவேப்பிலை சேர்த்து, 1 நிமிடம் வதக்கவும்.
  3. இதனிடையே பொறியை அளந்து, நன்கு அலசவும். ஒரு வடிகட்டியில் தண்ணீரை முற்றிலுமாக வடியும்படி வைக்கவும்.
  4. மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும். தண்ணீர் இல்லாமல் வடிந்த பொறியை சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் வதக்கி, இறக்கவும். எலுமிச்சம் பழ சாறு சேர்த்து கலக்கவும்.