பூரி செய்வது எப்படி என்று வீடியோ மற்றும் ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன் பார்ப்போம். ,பூரி பொதுவாக காலை சிற்றுண்டியாக, உருளைக்கிழங்கு மசாலாவுடன் (பூரி கிழங்கு) சாப்பிடுவது வழக்கம்.
Course: Breakfast
Cuisine: Indian
Servings: 6
Author: rakskitchentamil
- கோதுமை மாவு - 1 கப்
- நெய் அல்லது எண்ணெய் சூடாக - 1 தேக்கரண்டி
- சக்கரை - 1/4 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - பொரிப்பதற்கு
ஒரு அகலமான பாத்திரத்தில், மாவு, உப்பு, சக்கரை, நெய்/ எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.
நன்கு கலக்கவும்.
தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கெட்டியான மாவாக பிசைந்து, 10 நிமிடம் மூடிவைக்கவும்.
மீண்டும் பிசைந்து, வெடிப்புகள் இல்லாமல் சம அளவு உருண்டைகளாக உருட்டவும். (5-6 )
உருட்டிய மாவை, சிறிது மைதா அல்லது கோதுமை மாவு தொட்டு, சற்று மொத்தமான பூரிகளாக திரட்டவும்.
திரட்டிய பூரிகளை ஒரு தட்டில் ஒன்றோடொன்று ஒட்டாமல் போட்டு வைத்துக்கொள்ளவும்.
எண்ணெய்யை காயவைத்து,சற்று புகை வர ஆரம்பிக்கும் பொழுது, தீயை அடக்கிவிட்டு, ஒவ்வொரு பூரிகளாக பொரித்து எடுக்கவும்.
இரு புறமும் சிவந்தவுடன், வடித்தட்டில் எடுக்கவும்.
பூரி மாவு, சப்பாத்தி மாவைவிட சற்று கெட்டியாக இருக்க வேண்டும். ஆனால் ரொம்பவும் வெடிப்புடன் இருக்கும் அளவிற்கு இருக்கக்கூடாது.
சக்கரை சேர்த்தால் நன்கு பொன்னிறமாக பூரி இருக்கும்.
பூரியை செய்திதாளிலோ, புத்தகத்திலோ போட்டு வைக்கவேண்டாம். அதில் இருக்கும் மை ரசாயனம் , உடலுக்கு நல்லதல்ல.
10-12 பூரிக்குமேல் போட்டு வைக்கவேண்டாம். இல்லையென்றால் உப்பாது.
மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால் பூரி பொரிக்கும் பொழுது ஓட்டை .விழுந்து, உப்பது. அதிக நேரம் உப்பியவாறே இருக்கவேண்டும் என்றல், கெட்டியாக மாவு பிசைய வேண்டும்.
எண்ணெய் சூடாக இல்லாவிட்டாலும் பூரி உப்பாது. எண்ணெய் குடிக்கும்.