பருப்பை, 1 மிளகையோடு பெருங்காயம் 1 சிட்டிகை, 1 கப் தண்ணீர் சேர்த்து, 4 விசில் வரை மிதமான தீயில் வேக வைக்கவும். வெந்ததும் நன்கு குழைத்து வைத்துக்கொள்ளவும்.
புளியை 1 கப் வெந்நீரில் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். 30 நிமிடங்கள் கழித்து நன்கு கரைத்து வடிகட்டி, புளிக்கரைசல் தயாரித்து வைத்துக்கொள்ளவும்.
மாங்காயை படத்தில் காட்டியுள்ளது போல வெட்டி வைத்துக்கொள்ளவும். அதாவது, முதலில் மாங்காயை குறுக்கே அறியவும். பிறகு அதனை துண்டுகளாக நறுக்கவும். நல்ல கூர்மையான கத்தி/ அருவாமனை இருந்தால் தன் எளிதாக இருக்கும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
அறிந்த வெங்காயம் சேர்த்து மிருதுவாகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில், புளிக்கரைசல், 1 கப் தண்ணீர் சேர்த்து, வதக்கிய பொருட்கள், உப்பு, சாம்பார் போடி, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். அறிந்த மாங்காய் சேர்த்து வேக விடவும்.
-5 நிமிடங்கள் கழித்து ஒரு மாங்காய் துண்டை எடுத்து அழுத்தி வெந்துவிட்டதா என பார்க்கவும்.
வெந்த பின், பருப்பை சேர்த்து, தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். சில கருவேப்பிலை இலைகளை கிழித்து போட்டு, அடுப்பை விட்டு இறக்கவும்.