தக்காளி குருமா இட்லி, தோசை, பூரிக்கு தொட்டுக்கொள்ள ஏற்ற ஒரு சைட் டிஷ். மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒன்று. 15 நிமிடங்களில் ரெடி ஆகிவிடும்.
Course: Breakfast
Cuisine: Indian
Servings: 3
Author: rakskitchentamil
- வெங்காயம் - 2
- தக்காளி - 2
- சாம்பார் பொடி - 3/4 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
- தேங்காய் துருவல் - 1/4 கப்
- பச்சை மிளகாய் - 5
- சோம்பு - 1/2 தேக்கரண்டி
- பொட்டுக்கடலை - 1 மேஜைக்கரண்டி
- எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
- பட்டை - 1 சிறிய துண்டு
- கிராம்பு - 2
தேங்காய், சோம்பு, பச்சை மிளகாய், பொட்டுக்கடலை அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சூடாக்கி, பட்டை கிராம்பு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
தக்காளி குழைந்தவுடன் சாம்பார் தூள், மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
அரைத்த தேங்காய் மசாலாவை ஊற்றி, 1 & 1/2 தண்ணீர் சேர்த்து, உப்பு சரி பார்த்து 3-4 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.