மோதகம்
மோதகம் செய்முறை, Mothagam recipe in tamil
Prep Time
25 mins
Cook Time
20 mins
Total Time
45 mins
 

மோதகம் அல்லது வெல்ல பூரண கொழுக்கட்டை, விநாயகர் சதுர்த்தி அன்று செய்யக்கூடிய முக்கியமான பலகாரம் ஆகும்.

Course: Snack
Cuisine: Indian
Keyword: கொழுக்கட்டை, மோதகம், விநாயகர் சதுர்த்தி
Servings: 15
Author: Raks Anand
Ingredients
  • 1/2 கப் அரிசி மாவு / இடியப்ப மாவு
  • 1 தேக்கரண்டி நல்லெண்ணெய்
  • உப்பு தண்ணீர் - தேவையான அளவு
  • 1 கப் துருவிய தேங்காய்
  • 1 கப் வெல்லம் 3 மேஜைக்கரண்டி எடுத்து விடவும்
  • 2 ஏலக்காய்
Instructions
  1. போதுமான தண்ணீரை, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். மாவில், உப்பு சேர்த்து, கொதிக்கும் தண்ணீரை ஊற்றி பிசையவும். ஒரு தோசைத்திருப்பியின் காம்பு கொண்டு கிளறலாம். அல்லது ஒரு கரண்டி கொண்டும் கிளறலாம்.
  2. சிறிது கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன், நன்கு பிசைந்து, 12 சமமான அளவு உருண்டைகளாக உருட்டி, மூடிவைக்கவும்.
  3. வெல்ல பூரணத்திற்கு, தேங்காய், மற்றும் வெல்லத்தை ஒன்றாக மிதமான தீயில் வைத்து கிளறவும்.
  4. வெல்லம் இளகி, நன்கு தேங்காயுடன் கலந்து மறுபடியும் இறுகும் வரை கிளறி, ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து இறக்கவும்.
  5. ஆறியபின் சம அளவு உருண்டைகளாக உருட்டவும்.
  6. கைகளில் சிறு துளி எண்ணெய் தடவி, உருட்டிய மாவு உருண்டையை, மெல்லிய தடிமன் உள்ள கிண்ணமாக செய்யவும்.
  7. உள்ளே பூரண உருண்டையை வைத்து, மூடி, அழகாக மோதகம் வடிவில் ஷேப் செய்யவும்.
  8. இட்லி தட்டில் எண்ணெய் தடவி, செய்த மோதகங்களை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
Recipe Notes

தண்ணீரை நன்கு கொதிக்க விட வேண்டும், இல்லையெனில், மாவு வேகாமல் கிண்ணம் செய்ய வராது, வின்டு போய் விடும் .
கொழுக்கட்டை செய்ய , அரிசி மாவு மிகவும் நைசாக இருக்க வேண்டும்.
கொழுக்கட்டை வெந்துவிட்டதை, பளபளப்பான மேல் மாவை கொண்டு அறியலாம்.