கோதுமை ரவா பாயசம்
Prep Time
2 mins
Cook Time
25 mins
Total Time
27 mins
 
கோதுமை ரவா பாயசம், கோதுமை ரவை, பால் மற்றும் வெள்ளம் சேர்த்து செய்யும் ஒரு சுவையான பாயசம்.
Course: Dessert
Cuisine: Indian
Servings: 2 & 1/2 cups
Author: Rakskitchentamil
Ingredients
 • கோதுமை ரவா - 1/4 கப்
 • வெல்லம் - 1/2 கப்
 • பால் - 1 கப்
 • உப்பு - 1 சிட்டிகை
 • நெய் - 1 தேக்கரண்டி
 • முந்திரிப்பருப்பு - 6
 • ஏலக்காய் - 1
Instructions
 1. முதலில் ஒரு சிறிய குக்கரில் நெய் சேர்த்து, முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 2. அதே குக்கரில் கோதுமை ரவையை சேர்த்து ஒரு நிமிடம் குறைந்த தீயில் வறுக்கவும்.
 3. கப் - 1& 1/4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 3-4 விசில் மிதமான தீயில் வேக வைக்கவும்.
 4. மிருதுவாக வெந்தவுடன், வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் சேர்த்து சூடு செய்து கரைக்கவும். வெந்த கோதுமை ரவையுடன் வடிகட்டி சேர்த்து கலக்கவும். 1/2 கப் மேலும் தண்ணீர் சேர்க்கவும்.
 5. குறைந்த தீயில் 5 நிமிடம் பாகு சுண்டும் வரை கொதிக்க விடவும்.
 6. பாலை, மெதுவாக சேர்த்து கலக்கவும். ஏலக்காய், வறுத்த முந்திரி சேர்த்து 2 நிமிடம் சூடு செய்யவும். அடிபிடிக்காமல் கலந்து கொண்டே இருக்கவும். ஆரிய பிறகு கெட்டியாகும் அதனால் அதற்கு தகுந்தவாறு அடுப்பை நிறுத்தவும்.
Recipe Notes

தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம்.
பாயசம் மிகவும் கெட்டியாகிவிட்டால், சிறிது காய்ச்சிய பால் சேர்த்து சரி செய்து கொள்ளவும்.