paruppu vadai seivadhu eppadi
Prep Time
3 hrs
Cook Time
20 mins
Total Time
3 hrs 20 mins
 
பருப்பு வடை, கடலை பருப்பு மற்றும் சிறிது உளுத்தம் பருப்பும் சேர்த்து செய்யும் ஒரு சிற்றுண்டி. மிகச்சில பொருட்களுடன், மொறுமொறுப்பாகவும், வாசனையாகவும் இருக்கும்.
Course: snacks
Cuisine: Indian
Servings: 12
Author: Rakskitchentamil
Ingredients
  • பருப்பு வடை செய்ய என்ன தேவை?
  • கடலை பருப்பு - 1/2 கப்
  • உளுத்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
  • சிகப்பு மிளகாய் - 4
  • வெங்காயம் - 1
  • பெருங்காயம் - 1/8 தேக்கரண்டி
  • ஜீரகம் - 1 தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப
  • கருவேப்பிலை - ஒரு ஆர்க்கு
  • பொடியாக நறுக்கியா கேரட் - 2 மேஜைக்கரண்டி வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ளலாம்
Instructions
  1. * வெங்காயம் சேர்க்காமலும் இந்த வடையை செய்யலாம்.
  2. பருப்பு வடை எப்படி செய்வது?
  3. இரண்டு பருப்பையும் கழுவி, 3 மணிநேரம் குறைந்தது ஊற வைக்கவும்.
  4. தண்ணீரை வடித்து, முதலில் மிக்சியில் உப்பு, மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
  5. பிறகு பருப்பை சேர்த்து, ஓரிரு தடம் மிக்சியை சுற்றவிடவும். ஓரங்களை வழித்துவிட்டு, நிறுத்தி நிறுத்தி 3-4 முறை அரைக்கவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம்)
  6. கரகரப்பாக அரைத்த பருப்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், காரட், பெருங்காயம், உப்பு, கிரகம், கருவேப்பில்லை அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.
  7. கைகளை தண்ணீரில் ஒவ்வொரு முறையும் நனைத்து, சிறி உருண்டைகளாக உருட்டி , லேசாக தட்டவும்.
  8. தட்டிய வடையை, சூடான எண்ணெய்யில் கவனமாக போவும். பொரித்து எடுக்கவும்.
  9. இரு புறமும் பொன்னிறமாக வெந்தவுடன் கிட்சன் டிஷுயூவில் எடுத்து வைக்கவும்.
Recipe Notes

பருப்புகளை குறைந்தது 3 மணி நேரம் ஊறவைத்தால் தான் வடை மொறு மொறுப்பாக இருந்தாலும் அழுத்தமாக இருக்காது.
மிகவும் நைஸாகவோ அல்லது முழு பருப்புகள் நிறைய இருக்கவும் கூடாது.
இதே வடையில் முட்டைகோஸ், பட்டாணி சேர்த்து செய்தல் இன்னும் சுவையாகவும், சாதனதாகவும் இருக்கும்.