வெந்தய கீரை கூட்டு
வெந்தய கீரை கூட்டு, மிகவும் சத்தான, சுவையான கூட்டு. சூடான சாதத்தில், கூட்டை ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். பயற்றம் பருப்பும் தெகையும் சேர்ப்பதால் கசப்பு அறவே இருக்காது. கசக்கும் அன்று நினைத்து தான் இவ்வளவு நாள் நான் சமைக்காமல் இருந்தேன், அனால், வெந்தய கீரை சாம்பார் செய்த பிறகு, இதுவும் நன்றாகத்தான் இருக்கும் என்று எனக்கு நம்பிக்கை வந்தது.
அம்மா செய்யும் கூட்டு தான் எனக்கு மிகவும் பிடித்த கூட்டு. அம்மா பருப்பை மலர வேகவைத்து கூட்டில் சேர்ப்பார். தேங்காய் அரைத்து ஊற்றும் பொழுது சிறிது அரிசி மாவு சேர்ப்பார். பயற்றம் பருப்பை மிகவும் குழைத்து விட்டால் கூட்டு மிகவும் கெட்டியாகவும், வேறு சுவையுடனும் இருக்கின்ற போல் எனக்கு தோன்றும். அதனால் எனக்கு அம்மாவின் கூட்டு தான் மிகவும் பிடிக்கும். அம்மா அடுப்பில் தண்ணீர் கொதிக்க வைத்து கிண்ணத்திலேயே வேக வைப்பார். எனக்கு அதை செய்ய சோம்பேறித்தனம்! அதனால் குக்கரில் வைத்து குழைத்துவிடுவேன். எப்பொழுதாவது தான் முறையாக செய்வேன்.
அந்தக்காலத்தில் விறகடுப்பில் ஒரு சுரங்கம்போல ஒரு கிளை சென்று, ஒரு சிறிய சதுப்பு இருக்கும். என் பெரியம்மா வீட்டில் இதை பார்த்திருக்கின்றேன். சமையல் பெரிய அடுப்பில் நடக்க, இந்த குட்டி அடுப்பில், பொதுவாக பருப்பை வைத்துவிட்டால் அது பாட்டிற்கு வந்துகொண்டிருக்கும். அதன் பெயர் எனக்கு ஞாபகம் வந்தால் update செய்கிறேன். அது பார்க்கவே எனக்கு அழகாகவும் ஆச்சிர்யமாகவும் இருக்கும்.
நான் இங்கு சற்று பெரிய வெந்தய கீரையை உபயோகித்து செய்திருக்கிறேன் (north Indian variety), ஆனால் பொதுவாக, 4 இலைகள் மட்டுமே முளைத்துள்ள நிலையில் இருக்கும் கீரையை கொண்டு தான் இதனை செய்வார்கள்.
வெந்தய கீரை கூட்டு செய்ய என்ன தேவை?
- வெந்தய கீரை – 2 கப் (கப்பில் அழுத்தி அளக்கவும்)
- பயற்றம் (பாசி) பருப்பு – 3 மேஜைக்கரண்டி
- தேங்காய் – 1/2 கப்
- சாம்பார் தூள் – 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- உப்பு – தேவைக்கேற்ப
- சக்கரை – 1/4 தேக்கரண்டி
- அரிசி மாவு – 1/4 தேக்கரண்டி
தாளிக்க
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- கடுகு – 1/2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
- ஜீரகம் – 1 தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் – 4
வெந்தய கீரை கூட்டு எப்படி செய்வது?
- பாசி பருப்பை (பயற்றம் பருப்பு) 1/2 கப் தண்ணீர் சேர்த்து, 2 விசில் மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.
- வெந்தய கீரையை ஆய்ந்து, கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். சிறிது தண்ணீரை கொதிக்கவைத்து, அதில் வெந்தய கீரை, சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து வேக வைக்கவும்.
- தேங்காயை அரிசி மாவு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- வெந்த கீரையில் பருப்ப்பை சேர்க்கவும்.
- அரைத்த தேங்காயையும் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு கோதி வந்தவுடன் அடுப்பை அனைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடு செய்யவும். தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்து, நைசாக அறிந்த வெங்காயத்தை சேர்க்கவும்.
- பொன்னிறமானவுடன் கூட்டில் சேர்த்து கலக்கவும்.

- வெந்தய கீரை - 2 கப் கப்பில் அழுத்தி அளக்கவும்
- பயற்றம் பாசி பருப்பு - 3 மேஜைக்கரண்டி
- தேங்காய் - 1/2 கப்
- சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
- சக்கரை - 1/4 தேக்கரண்டி
- அரிசி மாவு - 1/4 தேக்கரண்டி
- தாளிக்க
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- ஜீரகம் - 1 தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 4