உப்பு சீடை செய்முறை, ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் மற்றும் வீடியோவுடன். உப்பு சீடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
கோகுலாஷ்டமி என்றாலே முறுக்கு சீடை தான் நினைவிற்கு வரும். நான் சிறுவயதிலிருந்தே வீட்டில் செய்த பலகாரங்கள் சாப்பிட்டு தான் பழக்கம். அம்மா வீட்டிலேயே முறுக்கு சீடை செய்துவிடுவார். திருமணத்திற்கு பின்பு தான் கடையில் வாங்கும் சீடை சாப்பிட்டேன். கடையில் வாங்கும் சீடை எனக்கு பிடிக்கும். கரகரவென்று இருக்கும், அனால் எண்ணெய் கோர்த்தது போல இருக்கும். வீட்டில் செய்யும் சீடை வாசனையே வேறு. உளுந்து வாசனையுடன் நன்றாக இருக்கும்.
அம்மா வெண்ணெய் சேர்க்காமல் செய்வார். திருமணத்திற்கு பிறகு, ஒரு சில வருடங்கள் சீடையே சாப்பிடாமல் போய்விட்டது. சிங்கப்பூர் வந்த பிறகு, நானே செய்தால் தான் சீடை சாப்பிட முடியும் என்ற நிலைமை. அதனால் ஒரு முறை கடை அரிசி மாவு வைத்து சீடை செய்தேன். ஒன்று விடாமல் எல்லாமும் வெடித்தது. அதன் பிறகு அதற்கு அடுத்த வருடம் அம்மா செய்யும் முறையிலேயே வீட்டில் தயாரிக்கும் அரிசி மாவு வைத்து செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.
சீடை வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
- சீடை வெடிக்காமல் இருக்க, மாவை நன்கு ஆவி வரும் வரை வறுக்க வேண்டும். மாவை எடுத்து கோடு போட்டால் கோடு உடையாமல் வரவேண்டும். ரொம்பவும் வறுத்துவிடக்கூடாது. நிறம் மாறாமல், மிதமான தீயில் வறுக்கவும்.
- மற்ற பொருள்களையும் வருத்தே சேர்க்கவேண்டும். உளுந்து மாவு, எள் மற்றும் தேங்காய் துருவல்.
- வெண்ணெய் சேர்ப்பதால் சிவக்காமலும், காரகரவென்றும் வரும், மாவு ரொம்பவும் பசைபோல இல்லாமல், உதிரியாக இருக்கும்.
- மாவு சரியாக வறுக்காமல் செய்தால் வெடிக்கும்.
- அழுத்தி உருட்டக்கூடாது. உருட்டி, வெள்ளை வேஷ்டி துணியில் காற்றாட சில நிமிடம் போடுவதால், ஈரப்பதம் இல்லாமல், வெடிக்காமல் இருக்கும்.
கவனம் தேவை:
- எக்காரணத்தை கொண்டும், ஒரே ஒரு சீடையை மட்டும் எண்ணெய்யில் போட்டு சோதிக்க வேண்டாம். சூடான எண்ணெயில் போடும் பொழுது, டக்கென்று வெடிக்க வாய்ப்புள்ளது.
- முதல் ஈடோ, கடைசி ஈடோ, எதுவாக இருந்தாலும், எட்டி நிற்பதே நல்லது. சீடை போட்டவுடன் வெடிக்காது. சிறிது நேரம் கழித்து தான் வெடிக்க ஆரம்பிக்கும். அதனால் எக்காரணத்தை கொண்டும் கிட்டே சென்று எட்டி பார்க்காதீர்கள்.
- சீடை வேகும் பொழுது, மிதமான தீயில் வைத்துவிட்டு, ஒரு மூடி கொண்டு லேசாக திறந்தார் போல (ஆவி வெளியேற) மூடி வைக்கவும். ஒரு வேளை வெடித்தால் கூட எண்ணெய் வெளியிலோ, உங்கள் மெலோ தெறிக்காது. லேசாக திரந்திருக்க வேண்டியது அவசியம், இல்லை என்றால் ஆவி வேர்த்து, தண்ணீர் எண்ணெய்யில் சொட்டி அதுவும் எண்ணெய் வெளியே தெளிக்க காரணமாகிவிடும்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப்
உளுந்து மாவு – 2 மேஜைக்கரண்டி
கடலை மாவு அல்லது பொட்டுக்கடலை மாவு – 1 மேஜைக்கரண்டி
வெண்ணெய், இளகியது – 3 மேஜைக்கரண்டி
எள் – 2 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/8 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – 3 மேஜைக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
உப்பு சீடை செய்முறை:
- அரிசியை களைந்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து, ஒரு சுத்தமான வெள்ளை காட்டன் துணியில் பரப்பி 15 நிமிடம் வைக்கவும்.
- மிக்சியில் நைஸான மாவாக அரைக்கவும்.
- சல்லடையில் சலிக்கவும்.
- பானில் மிதமான தீயில் மாவை வறுக்கவும். நன்கு ஆவி வரும் வரை வறுக்கவும். கோடு போட்டால் நன்றாக வரைய வரவேண்டும். அந்த அளவிற்கு வறுக்க வேண்டும். அனால் நிரம் மாறக்கூடாது.
- உளுந்தை பொன்னிறமாக மிதமான தீயில் வறுக்கவும். ஆறவைத்து, நன்கு நைஸான மாவாக அரைத்து, சலித்து வைத்துக்கொள்ளவும்.
- லேசாக உளுந்து மாவையும் சூடு செய்து, அரிசி மாவுடன் சேர்க்கவும்.
- துருவிய தேங்காயை ஈரம் போகும் வரை வறுக்கவும்.
- வெண்ணெய், எள், பெருங்காயம், தேங்காய், உப்பு, கடலை மாவு/ பொட்டுக்கடலை மாவு எல்லாவற்றையும் சேர்த்து, நன்கு கலக்கவும்.
- தண்ணீர் தெளித்து, மாவாக பிசையவும். சற்று பொல பொலவென இருப்பது அவசியம். பசைபோல இருக்கக்கூடாது.
- சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- எண்ணெய் காயவைத்து, சீடையை அதில் கவனமாக போடவும். (மேலே குறிப்பிட்டுள்ள முக்கியமான குறிப்புகளை படித்துக்கொள்ளவும்.)
சீடை பொறிப்பதற்கு
- 2-3 பாகங்களாக உருட்டிய சீடைகளை பிரித்து பொரிக்கவும்.
- சீடை போடும் பொழுது, எண்ணெய் சூடாக இருக்கவேண்டும். பிறகு, மிதமான தீயில் வைத்து, பாதி வெந்தவுடன் நன்கு கலந்து, மீண்டும் மிதமான தீயிலே வேக வைக்கவேண்டும்.
- சத்தம் அடங்கி, லேசாகவும், பொன்னிறமாகவும் ஆகும் வரை பொரிக்கவும். சற்று நேரம் எடுக்கும், ஆனால் பொறுமை அவசியம். இல்லையென்றால் உள்ளே பொறியாமல், மிருதுவாக இருக்கும்.
- கிச்சன் டிஷ்யூவில் வடித்து வைத்துக்கொள்ளவும். இதேபோல எல்லா சீடைகளையும் பொரித்து எடுக்கவும்.
ஆரிய பின், காற்றுபுகா டப்பாவில் போட்டு வைக்கவும்.

- பச்சரிசி - 1 கப்
- உளுந்து மாவு - 2 மேஜைக்கரண்டி
- கடலை மாவு அல்லது பொட்டுக்கடலை மாவு - 1 மேஜைக்கரண்டி
- வெண்ணெய் இளகியது - 3 மேஜைக்கரண்டி
- எள் - 2 தேக்கரண்டி
- பெருங்காயம் - 1/8 தேக்கரண்டி
- துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
- அரிசியை களைந்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து, ஒரு சுத்தமான வெள்ளை காட்டன் துணியில் பரப்பி 15 நிமிடம் வைக்கவும்.
- மிக்சியில் நைஸான மாவாக அரைக்கவும்.
- சல்லடையில் சலிக்கவும்.
- பானில் மிதமான தீயில் மாவை வறுக்கவும். நன்கு ஆவி வரும் வரை வறுக்கவும். கோடு போட்டால் நன்றாக வரைய வரவேண்டும். அந்த அளவிற்கு வறுக்க வேண்டும். அனால் நிரம் மாறக்கூடாது.
- உளுந்தை பொன்னிறமாக மிதமான தீயில் வறுக்கவும். ஆறவைத்து, நன்கு நைஸான மாவாக அரைத்து, சலித்து வைத்துக்கொள்ளவும்.
- லேசாக உளுந்து மாவையும் சூடு செய்து, அரிசி மாவுடன் சேர்க்கவும்.
- துருவிய தேங்காயை ஈரம் போகும் வரை வறுக்கவும்.
- வெண்ணெய், எள், பெருங்காயம், தேங்காய், உப்பு, கடலை மாவு/ பொட்டுக்கடலை மாவு எல்லாவற்றையும் சேர்த்து, நன்கு கலக்கவும்.
- தண்ணீர் தெளித்து, மாவாக பிசையவும். சற்று பொல பொலவென இருப்பது அவசியம். பசைபோல இருக்கக்கூடாது.
- சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- எண்ணெய் காயவைத்து, சீடையை அதில் கவனமாக போடவும். (மேலே குறிப்பிட்டுள்ள முக்கியமான குறிப்புகளை படித்துக்கொள்ளவும்.)
- -3 பாகங்களாக உருட்டிய சீடைகளை பிரித்து பொரிக்கவும்.
- சீடை போடும் பொழுது, எண்ணெய் சூடாக இருக்கவேண்டும். பிறகு, மிதமான தீயில் வைத்து, பாதி வெந்தவுடன் நன்கு கலந்து, மீண்டும் மிதமான தீயிலே வேக வைக்கவேண்டும்.
- சத்தம் அடங்கி, லேசாகவும், பொன்னிறமாகவும் ஆகும் வரை பொரிக்கவும். சற்று நேரம் எடுக்கும், ஆனால் பொறுமை அவசியம். இல்லையென்றால் உள்ளே பொறியாமல், மிருதுவாக இருக்கும்.
- கிச்சன் டிஷ்யூவில் வடித்து வைத்துக்கொள்ளவும். இதேபோல எல்லா சீடைகளையும் பொரித்து எடுக்கவும்.
சீடை வெடிக்காமல் இருக்க, மாவை நன்கு ஆவி வரும் வரை வறுக்க வேண்டும். மாவை எடுத்து கோடு போட்டால் கோடு உடையாமல் வரவேண்டும். ரொம்பவும் வறுத்துவிடக்கூடாது. நிறம் மாறாமல், மிதமான தீயில் வறுக்கவும்.
மற்ற பொருள்களையும் வருத்தே சேர்க்கவேண்டும். உளுந்து மாவு, எள் மற்றும் தேங்காய் துருவல்.
வெண்ணெய் சேர்ப்பதால் சிவக்காமலும், காரகரவென்றும் வரும், மாவு ரொம்பவும் பசைபோல இல்லாமல், உதிரியாக இருக்கும்.
மாவு சரியாக வறுக்காமல் செய்தால் வெடிக்கும்.
அழுத்தி உருட்டக்கூடாது. உருட்டி, வெள்ளை வேஷ்டி துணியில் காற்றாட சில நிமிடம் போடுவதால், ஈரப்பதம் இல்லாமல், வெடிக்காமல் இருக்கும்.
எக்காரணத்தை கொண்டும், ஒரே ஒரு சீடையை மட்டும் எண்ணெய்யில் போட்டு சோதிக்க வேண்டாம். சூடான எண்ணெயில் போடும் பொழுது, டக்கென்று வெடிக்க வாய்ப்புள்ளது.
முதல் ஈடோ, கடைசி ஈடோ, எதுவாக இருந்தாலும், எட்டி நிற்பதே நல்லது. சீடை போட்டவுடன் வெடிக்காது. சிறிது நேரம் கழித்து தான் வெடிக்க ஆரம்பிக்கும். அதனால் எக்காரணத்தை கொண்டும் கிட்டே சென்று எட்டி பார்க்காதீர்கள்.
சீடை வேகும் பொழுது, மிதமான தீயில் வைத்துவிட்டு, ஒரு மூடி கொண்டு லேசாக திறந்தார் போல (ஆவி வெளியேற) மூடி வைக்கவும். ஒரு வேளை வெடித்தால் கூட எண்ணெய் வெளியிலோ, உங்கள் மெலோ தெறிக்காது. லேசாக திரந்திருக்க வேண்டியது அவசியம், இல்லை என்றால் ஆவி வேர்த்து, தண்ணீர் எண்ணெய்யில் சொட்டி அதுவும் எண்ணெய் வெளியே தெளிக்க காரணமாகிவிடும்.
For uppu seedai you have taken one cup rice. Is it rice or rice flour?
one cup rice, if ground, it will give two cups rice flour approximately 🙂