
திணை பணியாரம்
என்ன தேவை?
திணை – 1/2 கப்
அரிசி மாவு – 3 மேஜைக்கரண்டி
கோதுமை மாவு – 3 மேஜைக்கரண்டி
வெல்லம் – 1/4 கப்
துருவிய தேங்காய் – 1/4 கப்
சோடா உப்பு – ஒரு சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை
நெய் / நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை
- சாமையை 2 மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து, கெட்டியாக அரைக்கவும்.
- வெல்லம், அரிசி மாவு, கோதுமை மாவு, தேங்காய், உப்பு சேர்த்து கலக்கவும்.2 மணி நேரம் கழித்து, சோடா உப்பு சேர்த்து கலக்கவும். பணியாற சட்டியில் எண்ணெய் ஊற்றி, பணியாரங்களை ஊற்றி மூடி வேகவைக்கவும்.
- இருபுறமும் சிவக்க வேக வைத்து எடுக்கவும்.
குறிப்பு
- பாதி வாழைப்பழத்தை சேர்த்து மசித்து பணியாரம் செய்தால் மேலும் மிருதுவாக இருக்கும்.
I want more Tamil receipies.
Sure will post more