
சோயா பீன்ஸ் சுண்டல் நாம் செய்யும் சுண்டல் வகைகளிலிருந்து சற்று வித்தியாசமானது. செய்முறை மற்ற சுண்டல் போலவே தான், அனால் சோயா பீன்ஸ் வைத்து செய்யலாம் என்ற எண்ணம் எனக்கு இருந்ததில்லை. சோயா பீன்ஸ் என்று ஒன்று இருப்பதே என் மாமி ஒரு முறை எனக்கு சோயா பீன் வைத்து செய்து தந்த பொது தான் எனக்கு தெரிய வந்தது. சத்தானதும் சுவையானதுமாக இருந்தது. இதனை நான் சக்தி விகடனில் சில ஆண்டுகளுக்கு முன் பகிர்ந்திருந்தேன். நீங்களும் இதனை இந்த நவராத்திரி நாட்களில் ஒரு நாள் செய்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்
வெள்ளை காய்ந்த சோயா பீன்ஸ் – 1/2 கப்
துருவிய தேங்காய் – 3 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – 2 சிட்டிகை
கருவேப்பிலை – 1 கொத்து
சோயா பீன்ஸ் சுண்டல் செய்முறை
1. சோயா பீனை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள், தண்ணீரை வடித்து, மூழ்கும் அளவிற்கு தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து 3 விசில் வரை, மிதமான தீயில் வேகவைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து, பின் வேக வைத்த சோயா பீனை, தண்ணீர் வடித்து சேர்க்கவும். ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின், தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
குறிப்பு
** தேங்காய் எண்ணெய் சேர்த்து தாளித்தால் வாசனை நன்றாக இருக்கும்.

- வெள்ளை காய்ந்த சோயா பீன்ஸ் - 1/2 கப்
- துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- தாளிக்க
- எண்ணெய் - 1 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- பெருங்காயம் - 2 சிட்டிகை
- கருவேப்பிலை - 1 கொத்து
- சோயா பீனை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள், தண்ணீரை வடித்து, மூழ்கும் அளவிற்கு தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து 3 விசில் வரை, மிதமான தீயில் வேகவைக்கவும்.
- கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து, பின் வேக வைத்த சோயா பீனை, தண்ணீர் வடித்து சேர்க்கவும். ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின், தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.