

என்ன தேவை?
மாவு :
மைதா – 1 கப்
நெய் – 1 மேஜைக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை
பூரணம்
ரவா – 1/2 கப்
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
வெல்லம் – 3/4 கப்
ஏலக்காய் – 1
நெய் – 1 தேக்கரண்டி
சொஜ்ஜி அப்பம் எப்படிச் செய்வது?
- ஒரு கிண்ணத்தில், மைதா, உப்பு, நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மிருதுவான மாவாகப் பிசைந்து, குறைந்தது, இரண்டு மணி நேரம் வரை மூடி வைக்கவும்.
- ஒரு அடி கனமான பாதிரத்தில், 1&1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இதில், ரவையைத் தூவினாற்போல் சேர்க்கவும். கட்டி இல்லாமல் கிளறவும்.
- கூழ் போல ஆகும் வரை கிளறியபின், மூடி இட்டு மிதமான தீயில், நன்கு வேக விடவும்.
- வெந்ததும், பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறவும். வெல்லம் கரையும் வரை கிளறிவிடவும்.
- தேங்காய் துருவல், பொடித்த ஏலக்காய் சேர்த்து, கெட்டியாகும் வரை கிளறவும்.
- ஆறியபின் சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். மைதா மாவையும் மீண்டும் பிசைந்து, சம அளவு உருண்டைகளாக உருட்டவும். உருட்டிய மாவை, சப்பாத்தி இடும் பலகையில், எண்ணெய் தடவி, மைதா உருண்டையை வட்டமாக தட்டவும். இதன் நடுவே, பூரண உருண்டையை வைத்து, மாவைக்கொண்டு மூடவும்.
- மூடிய பாகத்தை அடியில் வைத்து, உள்ளங்கை அளவிலான அப்பங்களாக தட்டவும். அப்பம் மொத்தமாக இருக்க வேண்டும். எண்ணெய்யை காய வைத்து, அப்பங்களை இருபுறமும் உப்பும் வரை பொறித்து எடுக்கவும்.
உங்கள் கவனத்திற்கு
- அப்பங்களை பொரிக்காமல், தோசைக்கல்லில் சுட்டும் எடுக்கலாம்.
- மாவு உருண்டையும், பூரண உருண்டையும் ஒரே அளவு இருக்குமாறு உருட்டவும்.
- தேங்காய் சேர்க்காமலும் இதே போல செய்யலாம். 1/2 கப் வெல்லம் போதுமானது. வெள்ளத்திற்கு பதில் சர்க்கரை சேர்த்தும் செய்யலாம்.
- அப்பம் பொரிக்கும் பொழுது, சூடான எண்ணெய்யை மேலே ஊற்றினால் நன்கு உப்பி வரும்.
- மாவு மிருதுவாக இருந்தால் தான் நன்கு தட்ட வரும்.
- அதே போல, பூரணமும் சரியான பதத்திற்கு இருக்க வேண்டும்.
- ரவா வேகும் முன்னே வெல்லம் சேர்த்தால், பூரணம் மிட்டாய் போல ஆகிவிடும்.

சொஜ்ஜி அப்பம் | Sojji appam in tamil
Prep Time
2 hrs
Cook Time
20 mins
Total Time
2 hrs 20 mins
சொஜ்ஜி அப்பம் மைதா அல்லது ரவா உபயோகித்துச் செய்யும் ஒரு இனிப்பு பலகாரம். இதுவும் போளி செய்வது போலவேதான், ஆனால் இதன் பூரணமும் செய்முறையும் சற்று வேறு.
Course: Main
Cuisine: Indian
Keyword: அப்பம், சொஜ்ஜி
Servings: 10
Ingredients
- 1 கப் மைதா
- 1 மேஜைக்கரண்டி நெய்
- 1 ஒரு சிட்டிகை உப்பு
- 1/2 கப் ரவா
- 1/2 கப் தேங்காய்த் துருவல்
- 3/4 கப் வெல்லம்
- 1 ஏலக்காய்
- 1 தேக்கரண்டி நெய்
Instructions
- ஒரு கிண்ணத்தில், மைதா, உப்பு, நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தவையான அளவு தண்ணீர் சேர்த்து, மிருதுவான மாவாகப் பிசைந்து, குறைந்தது, இரண்டு மணி நேரம் வரை மூடி வைக்கவும்.
- ஒரு அடி கனமான பாதிரத்தில், 1&1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இதில், ரவையைத் தூவினாற்போல் சேர்க்கவும். கட்டி இல்லாமல் கிளறவும்.
- கூழ் போல ஆகும் வரை கிளறியபின், மூடி இட்டு மிதமான தீயில், நன்கு வேக விடவும்.
- வெந்ததும், பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறவும். வெள்ளம் கரையும் வரை கிளறிவிடவும்.
- தேங்காய் துருவல், பொடித்த ஏலக்காய் சேர்த்து, கெட்டியாகும் வரை கிளறவும்
- ஆறியபின் சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். மைதா மாவையும் மீண்டும் பிசைந்து, சம அளவு உருண்டைகளாக உருட்டவும்.
- உருட்டிய மாவை, சப்பாத்தி இடும் பலகையில், எண்ணெய் தடவி, மைதா உருண்டையை வட்டமாக தட்டவும்.
- இதன் நடுவே, பூரண உருண்டையை வைத்து, மாவைக்கொண்டு மூடவும்.
- மூடிய பாகத்தை அடியில் வைத்து, உள்ளங்கை அளவிலான அப்பங்களாக தட்டவும். அப்பம் மொத்தமாக இருக்க வேண்டும்.
- எண்ணெய்யை காய வைத்து, அப்பங்களை இருபுறமும் உப்பும் வரை பொறித்து எடுக்கவும்.
Recipe Notes
அப்பங்களை பொரிக்காமல், தோசைக்கல்லில் சுட்டும் எடுக்கலாம்.
மாவு உருண்டையும், பூரண உருண்டையும் ஒரே அளவு இருக்குமாறு உருட்டவும்.
தேங்காய் சேர்க்காமலும் இதே போல செய்யலாம். 1/2 கப் வெல்லம் போதுமானது.