
ராஜ்மா சுண்டல்
ராஜ்மா – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
அரைக்கவும்
துருவிய தேங்காய் – 1/4 கப்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – 1 இன்ச் துண்டு
தாளிக்க
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 3/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – 2 சிட்டிகை
கருவேப்பிலை – 1 கொத்து
செய்முறை
1. ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள், தண்ணீரை மாற்றி, உப்பு சேர்த்து, குக்கரில் 3 விசில் வரும் வரை மிதமான தீயில் வேக வைக்கவும்.
2. தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்துக்கொள்ளவும்.
4. வேகவைத்த ராஜ்மாவை, தண்ணீருடன் சேர்க்கவும். அதில் அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கிக்கொள்ளலாம்.
குறிப்பு
** சிகப்பு வகை ராஜ்மாவை தேர்ந்தெடுத்து வாங்கவும். கருப்பாக உள்ள ராஜ்மா வேக நேரம் அதிகம் எடுக்கும்.