
பாலக் முறுக்கு, பசலை கீரை வைத்து செய்யும் இந்த முறுக்கு, பார்ப்பதற்கு அழகாகவும், நல்ல சுவையுடனும் இருக்கும். சின்ன சின்ன முறுக்குகளாகச் செய்வதால், குழந்தைகளும் இதனை விரும்பிச் சாப்பிடுவர். இங்கே சிங்கப்பூர் முஸ்தபாவில் இதே போல முறுக்கு விற்பதைப் பார்த்திருக்கிறேன். அதே போல வீட்டில் செய்துபார்க்க பல நாட்களாக நினைத்து, இந்த ஆண்டு தீபாவளிக்கு இது சாத்தியமாகி உள்ளது. தீபாவளி பலகாரங்கள்
தேவையான பொருட்கள்
அரிசி மாவு – 1 கப்
கடலை மாவு – 1/4 கப்
பாலக் – 3/4 கப் நறுக்கியது
பச்சை மிளகாய் – 2
வெண்ணெய் – 2 தேக்கரண்டி
ஓமம் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
பாலக் முறுக்கு செய்முறை :
- பாலக் கீரையில் இருக்கும் மொத்தமான காம்பு/ நரம்பை நீக்கிவிடவும். பொடியாக நறுக்கவும்.
- பச்சை மிளகாய், தண்ணீர் சேர்த்து, பாலக் கீரையை நன்றாக அரைக்கவும்.
- ஒரு கிண்ணத்தில், அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, பெருங்காயம், வெண்ணெய், ஓமம் சேர்த்து கலக்கவும்.
- அரைத்த விழுதைச் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீர் தெளித்து, மிருதுவான மாவாகப் பிசையவும்.
- முறுக்கு அச்சில், நட்சத்திர வடிவம் கொண்ட தகட்டை பொருத்தி, மாவை அதில் நிரப்பவும்.
- ஒரு தட்டில் எண்ணெய் தடவி, அதில் சின்ன சின்ன வட்டங்களாக முறுக்கைப் பிழியவும். எண்ணெய்யைச் சூடாக்கி, பிழிந்து வைத்த முறுக்கை அதில் தட்டை கவிழ்த்துப் போடவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து, முறுக்கை வேக வைத்து, திருப்பி விடவும். மேலும் தீயை குறைத்து, சத்தம் முழுவதுமாக அடங்கும் வரை பொரித்து எடுக்கவும்.
- எண்ணெய்யிலிருந்து வடித்து, மீதமுள்ள மாவை இதே போல சுட்டு எடுக்கவும்.
குறிப்புகள்
- குறைவான தீயில், சத்தம் அடங்கும் வரை பொறுமையாக முறுக்கைப் பொரிக்கவும்,வெந்திருக்காது, மிகவும் அழுத்தமாக இருக்கும்.
- அதே சமயத்தில், தீயைத் தூக்கி வைத்தால் நிறம் மாறிவிடும்.

Palak murukku, பாலக் முறுக்கு
Prep Time
15 mins
Cook Time
25 mins
Total Time
40 mins
கீரை முறுக்கு, பசலை கீரை வைத்து செய்யும் இந்த முறுக்கு, பார்ப்பதற்கு அழகாகவும், நல்ல சுவையுடனும் இருக்கும்.
Course: snacks
Cuisine: Indian
Servings: 40
Ingredients
- அரிசி மாவு - 1 கப்
- கடலை மாவு - 1/4 கப்
- பாலக் - 3/4 கப் நறுக்கியது
- பச்சை மிளகாய் - 2
- வெண்ணெய் - 2 தேக்கரண்டி
- ஓமம் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
Instructions
- பாலக் கீரையில் இருக்கும் மொத்தமான காம்பு/ நரம்பை நீக்கிவிடவும். பொடியாக நறுக்கவும்.
- பச்சை மிளகாய், தண்ணீர் சேர்த்து, பாலக் கீரையை நன்றாக அரைக்கவும்.
- ஒரு கிண்ணத்தில், அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, பெருங்காயம், வெண்ணெய், ஓமம் சேர்த்து கலக்கவும்.
- அரைத்த விழுதை சேர்த்து, மேலும் சிறிது தண்ணீர் தெளித்து, மிருதுவான மாவாக பிசையவும்.
- முறுக்கு அச்சில், நட்சத்திர வடிவம் கொண்ட தகடை பொருத்தி, மாவை அதில் நிரப்பவும்.
- ஒரு தட்டில் எண்ணெய் தடவி, அதில் சின்ன சின்ன வட்டங்களாக முறுக்கை பிழியவும்.எண்ணெய்யை சூடாக்கி, பிழிந்து வைத்த முறுக்கை அதில் தட்டை கவிழ்த்து போடவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து, முறுக்கை வேகா வைத்து, திருப்பி விடவும்.
- மேலும் தீயை குறைத்து, சத்தம் முழுவதுமாக அடங்கும் வரை பொரித்து எடுக்கவும்.
- எண்ணெய்யிலிருந்து வடித்து, மீதமுள்ள மாவை இதே போல சுட்டு எடுக்கவும்.
Recipe Notes
குறைவான தீயில், சத்தம் அடங்கும் வரை பொறுமையாக முறுக்கை பொரிக்கவும்,வெந்திருக்காது, மிகவும் அழுத்தமாக இருக்கும்.
அதே சமயத்தில், தீயை தூக்கி வைத்தால் நிறம் மாறிவிடும்.