மிளகு சீரக அடை- karthigai deepam recipes in tamil

குதிரைவாலி மிளகு சீரக அடை

குதிரைவாலி அல்லது பச்சரிசி  – 1 கப்

அவல் – 1/4 கப்

மிளகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

துருவிய தேங்காய் – 1/4 கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் / நெய் – தேவையான அளவு

செய்முறை

  1. குதிரைவாலியை அவலுடன்  சேர்த்து அலசி, 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியபின், சிறிது தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.1-grind
  2.  மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாக பொடிக்கவும். 2-powder
  3. அரைத்த மாவுடன் சேர்த்து, துருவிய தேங்காயையும் சேர்த்து கலக்கவும்.3-mix
  4. தோசைக்கல்லை சூடு செய்து, சிறிது மொத்தமான அடைகளாக ஊற்றவும். இரு புறமும் சிறிது எண்ணெயோ நெய்யோ ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.4-cook

குறிப்பு

  • இட்லி அரிசி கொண்டு இதை போலவே அடை  செய்யலாம். (3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்)
  • துருவிய தேங்காயிற்கு  பதிலாக, பொடியாக நறுக்கிய தேங்காய் பற்களை சேர்க்கலாம்.

Author: Raks Anand

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *