
கம்பு அடை
என்ன தேவை?
கம்பு – 1/2 கப்
கடலை பருப்பு – 1/2 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
துவரம் பருப்பு – 1/4 கப்
வெங்காயம் – 1
முட்டைகோஸ்,பொடியாக நறுக்கியது – 1 கப்
சிகப்பு மிளகாய் – 8
இஞ்சி – 1 சிறு துண்டு
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு
கடுகு – 3/4 தேக்கரண்டி
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப
எப்படி செய்வது?
- பருப்பு, கம்பு, ஒன்றாக களைந்து குறைந்தது 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- முதலில் மிக்சியில் மிளகாய், பெருங்காயம், உப்பு, இஞ்சி சேர்த்து பொடிக்கவும்.
- பின்பு ஊறிய பருப்பு, கம்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். கம்பு அரைப்பட வேண்டும்.
- கடுகு பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, மாவில் சேர்த்து, முட்டைகோஸ் சேர்த்து கலக்கவும்.
- தோசைக்கல்லை சூடு செயது, சிறு துளி என்னை தடவி, ஒரு கரண்டி மாவை பரப்பி, மிதமான தீயில் மூடி வேகா விடவும். திருப்பி போட்டு, சிவக்கும் வரை வேகவைத்து சுட்டு எடுக்கவும்.
உங்கள் கவனத்திற்க்கு
- மாவை அரைத்ததுமே அடை செய்யலாம், அல்லது, ஓரிரு மணிநேரம் கழித்தும் செய்யலாம். அதற்க்கு மேலே பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
Very delicious..
Nice recipe ???thank u for ur recipe ??????
🙂 Do try it out!